விபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்துக்கான காரணம் என்ன? முழு அறிக்கை தாக்கல்

முப்படைகளின் முன்னாள் தளபதி விபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் விபத்து குறித்து அறிக்கை தாக்கல்...
பிபின் ராவத்
பிபின் ராவத்ANI
Published on
Updated on
1 min read

முப்படைகளின் முன்னாள் தளபதி விபின் ராவத் பயணம் மேற்கொண்ட ஹெலிகாப்டர் விபக்குள்ளான சம்பவம் குறித்து மக்களவையில் பாதுகாப்புத்துறை நிலைக்குழு வியாழக்கிழமை அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

கடந்த 2021 டிசம்பர் 8-ஆம் தேதி கோவை வந்த முப்படைத் தளபதி பிபின் ராவத், குன்னூரில் உள்ள வெலிங்டன் ராணுவத் தளத்தில் நடைபெறவிருந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக ஹெலிகாப்டரில் பயணம் மேற்கொண்டார்.

எம்ஐ-17 வி5 ரக விமானப் படையின் ஹெலிகாப்டரில் விபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உள்பட 12 அதிகாரிகள் பயணித்தனர்.

பகல் 1 மணியளவில் வெலிங்டனில் தரையிறங்க சில நிமிடங்களுக்கு முன்னதாக, மலையின் மீது ஹெலிகாப்டர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் விபின் ராவத், அவரது மனைவி உள்பட 11 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

ஹெலிகாப்டரை இயக்கி குரூப் கேப்டன் வருண் சிங் மட்டும் படுகாயங்களுடன் சிகிச்சைப் பெற்ற நிலையில், ஒரு வாரத்துக்கு பிறகு அவரும் உயிரிழந்தார்.

நிலைக்குழு அறிக்கை

இந்த சம்பவம் நடந்து மூன்று ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், மக்களவையில் பாதுகாப்புத் துறை நிலைக்குழு வியாழக்கிழமை அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளது.

அதில், 2017 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில் மட்டும் மொத்தமாக இந்திய விமானப் படைக்கு சொந்தமான 34 விமானம் மற்றும் ஹெலிகாப்டர்கள் விபத்துக்குள்ளானது.

2021 முதல் 2022 வரையிலான ஓராண்டில் பிபின் ராவத் ஹெலிகாப்டர் உள்பட 9 விபத்துகள் நடந்துள்ளன. இதில், விபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்துக்கான காரணம் மனிதப் பிழையே (ஏர் க்ரூ) எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக, விபத்து நடந்த காலக்கட்டத்தில் நடைபெற்ற முதல்கட்ட விசாரணையில், திடீரென சூழ்ந்த மேகக் கூட்டங்களால் எதிர்பாராத விதமாக விபத்து நேர்ந்திருக்கும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில், தற்போது ஹெலிகாப்டரின் கருப்புப் பெட்டி, காக்பிட் குரல் பதிவுகள் உள்ளிட்டவை தொழில்நுட்ப ரீதியாக ஆய்வு செய்யப்பட்டு மனிதப் பிழையே காரணம் என்று பாதுகாப்பு நிலைக்குழு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com