ஆன்மீகப் பேச்சாளரை ட்ரோல் செய்த யூடியூபர்கள் மீது வழக்கு!

ஆன்மீகப் பேச்சாளர் அபினவ் அரோராவை விமர்சித்து விடியோ வெளியிட்ட யூடியூபர்கள் மீது புகார்
அபினவ் அரோரா (கோப்புப் படம்)
அபினவ் அரோரா (கோப்புப் படம்)Abhinav Arora
Published on
Updated on
1 min read

ஆன்மீகப் பேச்சாளரான அபினவ் அரோராவை யூடியூபர்கள் விமர்சித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, விமர்சிக்கும் யூடியூபர்கள் மீது உத்தரப் பிரதேச நீதிமன்றத்தில் அபினவ் அரோரா புகார் அளித்துள்ளார்.

தில்லியைச் சேர்ந்த ஆன்மீகப் பேச்சாளரான அபினவ் அரோரா என்ற 10 வயது சிறுவனை விமர்சனம் செய்தும், கிண்டலாகவும் சில யூடியூபர்கள் விடியோ வெளியிட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அபினவை விமர்சித்தவர்கள் மீது அவரது வழக்கறிஞர் பங்கஜ் ஆர்யா புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து, பங்கஜ் கூறியதாவது ``அபினவ் அரோராவுக்கு எதிராக விமர்சித்து விடியோ வெளியிடும் யூடியூபர்கள் மீது நீதிமன்றத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அடுத்தகட்ட விசாரணை தேதி ஜனவரி 3 ஆம் தேதிக்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, உச்ச நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டியிருந்தாலும், நாங்கள் விடமாட்டோம். இந்த யூடியூபர்கள் மீது எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, அபினவ் அரோரா கூறியதாவது, ``யூடியூபர்கள் என்மீது சுமத்தும் குற்றச்சாட்டுகளைப் போல, நான் மோசமானவன் அல்ல. அவர்கள் என் மீது அபத்தமான பழியிடுகின்றனர். என்னுடைய ஆன்மீக வாழ்க்கை அனைத்தும் வணிக நோக்கம் என்று என் மீது குற்றம் சாட்டுகின்றனர். ஆனால், நான் கடவுள் கண்ணனின் வேலைக்காரன் மட்டுமே’’ என்று தெரிவித்தார்.

அபினவ் அரோரா, தனது 3 வயதில் இருந்தே ஆன்மீகப் பயணத்தை மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், இவருக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலிடம் இருந்து கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக, சில நாள்களுக்கு முன்னர் அவரது தாயார் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com