
தாணே: சச்சின் டெண்டுல்கரின் நண்பரான முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தாணே நகரிலுள்ள ஒரு மருத்துவமனையில் கடந்த சனிக்கிழமை இரவு அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும், எனினும் தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் அவர் இருக்க வேண்டியது கட்டாயமென்றும் மருத்துவமனையிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
52 வயதாகும் வினோத் காம்ப்ளி சிறுநீரக தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதற்காக தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
1988-ம் ஆண்டு நடந்த பள்ளிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியின் போது சச்சின்-காம்ப்ளி ஜோடி 664 ரன்கள் குவித்து சாதனைப் புரிந்தது. இந்நிலையில், 1996-ம் ஆண்டு நடந்த கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டித் தொடருக்குப் பின்னர் இருவரின் நட்பில் விரிசல் ஏற்பட்டது. அதுமட்டுமல்லாமல் சரியாக விளையாட காரணத்தால் வினோத் காம்ப்ளி இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.