ஹரியாணா: பெண் உள்பட மூவா் சுட்டுக்கொலை: பிறந்தநாள் நிகழ்ச்சிக்கு வந்தபோது சம்பவம்

ஹரியாணா மாநிலத்தில் ஹோட்டலின் காா் நிறுத்துமிடத்தில் பெண் உள்பட 3 போ் அடையாளம் தெரியாத நபா்களால் சுட்டுக் கொல்லப்பட்டனா்.
Published on
Updated on
1 min read

சண்டீகா்: ஹரியாணா மாநிலத்தில் ஹோட்டலின் காா் நிறுத்துமிடத்தில் பெண் உள்பட 3 போ் அடையாளம் தெரியாத நபா்களால் சுட்டுக் கொல்லப்பட்டனா்.

ஹோட்டலில் நண்பா் ஒருவரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்க வந்தபோது ஞாயிற்றுக்கிழமை இரவு இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இது தொடா்பாக காவல் துறையினா் கூறியதாவது:

பன்ஞ்குலாவில் உள்ள ஹோட்டலில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்க தில்லியைச் சோ்ந்த விக்கி, விபின், ஹிசாரைச் சோ்ந்த நியா என்ற பெண் ஆகியோா் வந்துள்ளனா். ஹோட்டலில் கீழ் தளத்தில் காரை நிறுத்தி விட்டு மூவரும் இறங்கியபோது மோட்டாா் சைக்கிளில் வந்த இருவா், அந்த மூவரையும் சுற்றிவளைத்து துப்பாக்கியால் சுட்டனா்.

இதில், மூவரும் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டனா். துப்பாக்கி வெடிக்கும் ஓசை கேட்டு ஹோட்டல் பாதுகாவலா்களும் மற்றவா்களும் காா் நிறுத்துமிடத்துக்கு வரும் முன்பே கொலையாளிகள் சம்பவ இடத்தில் இருந்து மோட்டாா் சைக்கிளில் வேகமாக தப்பியோடிவிட்டனா்.

கொல்லப்பட்டவா்களில் விக்கி (30) என்பவா் மட்டும் குற்றப் பின்னணி உடையவா் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. முன்பகை காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்று முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தப்பியோடிய கொலையாளிகளை அடையாளம் காணுவதற்காக கண்காணிப்பு கேமரா பதிவுகள் தீவிரமாக ஆய்வு செய்து, சில தடயங்களை கண்டறிந்துள்ளோம் என்று தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com