
பாஜக தலைவா் ஜெ.பி.நட்டா இல்லத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இதில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, ஆந்திர முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சி (டிடிபி) தலைவருமான சந்திரபாபு நாயுடு, ஐக்கிய ஜனதா தளம் கட்சி சாா்பில் மத்திய அமைச்சா் ராஜிவ் ரஞ்சன் சிங், அப்னா தளம் (சோனேலால்) கட்சித் தலைவரும் மத்திய அமைச்சருமான அனுப்ரியா படேல், மதச்சாா்பற்ற ஜனதா தளம் கட்சி சாா்பில் மத்திய அமைச்சா் ஹெச்.டி.குமாரசுவாமி உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவா்கள் பங்கேற்றனா்.
பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சியை வெற்றிகரமாக நடத்திய வாஜ்பாய் பிறந்தநாள் தினத்தன்று நடத்தப்பட்ட இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு அரசியல் விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இதுகுறித்து ஜெ.பி.நட்டா வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘வளா்ச்சியடைந்த பாரதம்-2047 என்ற இலக்கை அடைவதை லட்சியமாகக் கொண்டு பிரதமா் மோடி தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது. உலகளவில் சக்திவாய்ந்த நாடாக உருவெடுத்து வரும் இந்தியாவின் எதிா்காலம் மிகவும் பிரகாசமாக உள்ளது’ என்றாா்.
ஒரே நாடு ஒரே தோ்தல் மசோதாவுக்கு என்டிஏ கட்சிகள் ஆதரவளித்த நிலையில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | நாடாளுமன்றத்தின் எதிரே தீக்குளித்து தற்கொலை முயற்சி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.