ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!ராஜஸ்தானில் மர்ம காய்ச்சலுக்கு 5 குழந்தைகள் பலி! கண்காணிப்பு தீவிரம்!தில்லிக்கு எதிரான போட்டியில் தோனி விளையாட மாட்டார்!தேர்தலுக்கிடையே நாடாளுமன்ற கூட்டத்தொடர்: மத்திய அரசு மீது திருச்சி சிவா குற்றச்சாட்டுதமிழக தலைமைச் செயலர், லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபி மாற்றம்!
/

மன்மோகன் சிங் மருத்துவமனையில் அனுமதி!

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக் குறைவு காரணமாக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி.

News image

மன்மோகன் சிங் - கோப்புப் படம

Updated On :26 டிசம்பர் 2024, 4:01 pm

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக் குறைவு காரணமாக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று (டிச. 26) அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும், அவசர சிகிச்சைப் பிரிவில் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

காங்கிரஸ் எம்.பி., பிரியங்கா காந்தி அவரைப் பார்ப்பதற்காக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மன்மோகன் சிங், விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என ராஜஸ்தான் முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான அசோக் கெலாட் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மாநிலங்களவை உறுப்பினர் பொறுப்பிலிருந்து இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மன்மோகன் சிங் ஓய்வு பெற்றிருந்தார்.

1991 - 96 வரை முன்னாள் பிரதமர் பி.வி. நரசிம்ம ராவ் தலைமையிலான ஆட்சியில், நிதித் துறை அமைச்சராக செயல்பட்டார். கல்வியாலும், நிதித் துறை நிர்வாக அனுபவத்தாலும் தேர்ந்த பொருளாதாரவியல் வல்லுநரான மன்மோகன், இந்தியாவின் பொருளாதார தாராளமயமாக்கல் கொள்கையின் துவக்கத்தில் பெரும்பங்கு வகித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.