கோடிக்கணக்கில் குவியும் ராமர் கோயில் நன்கொடை!

அயோத்தி ராமர் கோயில் பொதுமக்களுக்கு திறக்கப்பட்டு 11 நாள்களாகியுள்ள நிலையில் கோடிக்கணக்கில் கோயில் நன்கொடை பெறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
அயோத்தி ராமர் கோயில்
அயோத்தி ராமர் கோயில்

அயோத்தியில் கடந்த ஜனவரி 22ம் நாள் ராமர் கோயில் திறப்பு விழா நடந்துமுடிந்த பின்னர் நாடெங்கிலுமிருந்த பக்தர்கள் கோவிலில் குவிந்த வண்ணம் உள்ளனர். 25 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் இதுவரை ராமர் கோயிலுக்கு வந்துசென்றுள்ளனர். ரூ.11 கோடிக்கும் அதிகமாக நன்கொடை  பெறப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.  

இதுகுறித்து பேசிய கோயில் அறக்கட்டளையின் அலுவலகப் பொறுப்பாளர் பிரகாஷ் குப்தா, கடந்த 11 நாள்களில் மட்டும் கோயில் உண்டியல்களில் 8 கோடி ரூபாய் பெறப்பட்டுள்ளதாகவும், காசோலைகள் மற்றும் இணையவழி மூலம் 3.50 கோடி ரூபாய் நன்கொடையாகப் பெறப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். 

கோயில் கருவறையில் நான்கு பெரிய உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். 11 வங்கிப் பணியாளர்கள் மற்றும் 3 கோயில் அறக்கட்டளை உறுப்பினர்களை உள்ளடக்கிய 14 பேர் கொண்ட குழு உண்டியல் நன்கொடை எண்ணிக்கையை நடத்துகிறது.  

நன்கொடையளிப்பதிலிருந்து எண்ணிக்கை நடைபெறுவதுவரை அனைத்தும் சிசிடிவி கண்காணிப்பின் கீழ் நடைபெறுகிறது என அவர் தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com