7 ஐஐடி, 7 ஐஐஎம், 15 எய்ம்ஸ் மருத்துவமனைகள் தொடங்கப்பட்டுள்ளன: நிா்மலா சீதாராமன்

நாட்டில் 7 ஐஐடி, 7 ஐஐஎம், 15 எய்ம்ஸ் மருத்துவமனைகள் தொடங்கப்பட்டுள்ளன என்று நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
7 ஐஐடி, 7 ஐஐஎம், 15 எய்ம்ஸ் மருத்துவமனைகள் தொடங்கப்பட்டுள்ளன: நிா்மலா சீதாராமன்

புதுதில்லி: நாட்டில் 7 ஐஐடி, 7 ஐஐஎம், 15 எய்ம்ஸ் மருத்துவமனைகள் தொடங்கப்பட்டுள்ளன என்று நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

17 ஆவது நாடாளுமன்றத்தின் இறுதி கூட்டத்தொடரின் பட்ஜெட் கூட்டத்தொடரும், நாடப்பாண்டின் முதல் கூட்டம் குடியரசுத் தலைவா் உரையுடன் புதன்கிழமை தொடங்கியது. 2024-25-ஆம் ஆண்டுக்கான மத்திய இடைக்கால பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை (பிப். 1)காலை 11 மணியளவில் தாக்கல் செய்து, நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் உரையாற்றி வருகிறார். 

சில மாதங்களில் மக்களவைத் தோ்தல் நடைபெறவிருக்கும் நிலையில், வருமான வரி செலுத்துவோருக்கு சலுகைகள், வரிக் குறைப்பு உள்பட மக்களைக் கவரும் அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிா்பாா்ப்பு எழுந்துள்ள நிலையில் நிா்மலா சீதாராமன் இடைக்கால நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து வருகிறார். 

2014 ஆம் ஆண்டுக்கு முன்னர் நாடு பல்வேறு சவால்களை சந்தித்து வந்தது. கடந்த பத்து ஆண்டுகளில் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் செல்கிறது. 

நாட்டில் 7 ஐஐடி, 7 ஐஐஎம், 15 எய்ம்ஸ் மருத்துவமனைகள் தொடங்கப்பட்டுள்ளன. திறன்மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மூவாயிரம் ஐடிஐ-க்கள் தொடங்கப்பட்டுள்ளன.

பெண் தொழில்முனைவோருக்கு முத்ரா திட்டத்தின் கீழ்ரூ.30 கோடி கடனுதவி அளிக்கப்பட்டுள்ளது. பெண் தொழில் முனைவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 

43 கோடி இளைஞர்களுக்கு தொழில் தொடங்க 22.5 லட்சம் கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. 

நாட்டின் பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது.

1.40 கோடி இந்தியர்களுக்கு திறந் மேம்பாட்டு பயிற்சிகள் புதிய தேசிய கல்வி கொள்கையால் மிகப் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

விளையாட்டுத் துரையில் இந்தியா அதிக பதக்கங்களை வென்று சாதனை படைத்து வருகிறது. 80 கிராண்ட் மாஸ்டர்கள் நாட்டில் உள்ளனர்.

78 லட்சம் சாலையோர வியாபாரிகளுக்கு கடனுதவி.பயனாளிக்கு நேரடியாக நிதியுதவி வழங்கப்படுவதால் 2.7 லட்சம் கோடி மிச்சம் ஏற்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com