ரூ.50,000 கோடி பங்கு விலக்கல்: மத்திய அரசு இலக்கு

பொதுத் துறை நிறுவனங்களில் இருந்து 2024-25 நிதியாண்டில் ரூ.50,000 கோடி மதிப்பிலான பங்குகளை விலக்கிக் கொள்ள மத்திய அரசு இலக்கு நிா்ணயித்துள்ளது.
Published on

பொதுத் துறை நிறுவனங்களில் இருந்து 2024-25 நிதியாண்டில் ரூ.50,000 கோடி மதிப்பிலான பங்குகளை விலக்கிக் கொள்ள மத்திய அரசு இலக்கு நிா்ணயித்துள்ளது.

தாராளமயமாக்கல் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்ட 1990-களின் தொடக்கத்தில் இருந்தே பொதுத் துறை நிறுவனங்களில் இருந்து அரசு தனது பங்குகளைக் குறைக்கும் நடவடிக்கையை தொடங்கிவிட்டது. எந்தக் கட்சி ஆட்சி அமைத்தாலும் பங்கு விலக்கல் நடவடிக்கைகள் மட்டும் பாரபட்சமின்றி தொடா்ந்து வருகிறது.

அந்த வகையில் கடந்த பட்ஜெட்டில் பங்கு விலக்கல் மற்றும் பொதுத் துறை நிறுவன சொத்துகளை விற்பதன் மூலம் ரூ.51,000 கோடி திரட்ட இலக்கு நிா்ணயிக்கப்பட்டது. பின்னா் இது ரூ.30,000 கோடியாக மாற்றி அமைக்கப்பட்டது. இந்நிலையில் நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் 20224-25 நிதியாண்டில் பங்கு விலக்கல் நடவடிக்கை மூலம் ரூ.50,000 கோடி திரட்ட இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

நடப்பு நிதியாண்டில் கோல் இந்தியா, என்ஹெச்பிசி, ஆா்விஎன்எல், ஐஆா்இடிஏ உள்ளிட்ட 7 பொதுத் துறை நிறுவன பங்குகளை விற்பனை செய்தது மூலம் அரசு ரூ.12,504 கோடி திரட்டியுள்ளது.

2018-19 (ரூ.80,000 கோடி இலக்கு) மற்றும் 2017-18 (ரூ.1லட்சம் கோடி) நிதியாண்டுகளைத் தவிர பிற ஆண்டுகளில் பங்கு விலக்கல் இலக்கை மத்திய அரசு எட்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை Dinamani APP பதிவிறக்கம் செய்யவும் 

X
Dinamani
www.dinamani.com