மின்னணு வாகனங்களுக்கான பேட்டரி சார்ஜிங் மையங்கள் அதிகரிப்படும்: நிர்மலா சீதாராமன்

மின்னணு வாகனங்களுக்கான பேட்டரி சார்ஜிங் மையங்கள் அதிகரிப்படும். பொது போக்குவரத்து நெட்வொர்க்குகளுக்கான இ-பேருந்துகள் ஊக்குவிக்கப்படும்
மின்னணு வாகனங்களுக்கான பேட்டரி சார்ஜிங் மையங்கள் அதிகரிப்படும்: நிர்மலா சீதாராமன்

புது தில்லி: மின்னணு வாகனங்களுக்கான பேட்டரி சார்ஜிங் மையங்கள் அதிகரிப்படும். பொது போக்குவரத்து நெட்வொர்க்குகளுக்கான இ-பேருந்துகள் ஊக்குவிக்கப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வியாழக்கிழமை தெரிவித்தார்.

17-ஆவது நாடாளுமன்றத்தின் இறுதி கூட்டத்தொடரின் பட்ஜெட் கூட்டத்தொடரும், நாடப்பாண்டின் முதல் கூட்டம் குடியரசுத் தலைவா் உரையுடன் புதன்கிழமை தொடங்கியது. 2024-25-ஆம் ஆண்டுக்கான மத்திய இடைக்கால பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை (பிப். 1)காலை 11 மணியளவில் தாக்கல் செய்தார்.

அப்போது, மின்னணு வாகனங்களுக்கான பேட்டரி சார்ஜிங் மையங்கள் அதிகரிப்படும். மேலும் பொது போக்குவரத்து சுற்றுச்சூழலுக்கு உகந்த மின்சார வாகன கட்டமைப்பு, மின்னணு வாகனங்களுக்கான உற்பத்தி, பயன்பாடு ஊக்குவிக்கப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வியாழக்கிழமை தெரிவித்தார்.

உயிரி-சிதைவு உற்பத்திக்கான சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுகளை வழங்க உயிரி உற்பத்தி மற்றும் உயிரி ஃபவுண்டரி திட்டம் தொடங்கப்படும்.

ஜி20 உச்சிமாநாடு இந்தியாவின் பன்முகத்தன்மையை உலகிற்கு பறைசாற்றியது. ஜி20 உச்சிமாநாடு சுற்றுலாத்துறையை வலுப்படுத்தியுள்ளது.

நாட்டின் பொருளாதாரத்தின் வலிமையாக சுற்றுலாத்துறைக்கு மிகப்பெரிய வாய்ப்புகள் இருப்பதாக கூறிய அவர், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் சின்னச் சின்ன சுற்றுலா மையங்களை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கும். உள்நாட்டு சுற்றுலாவை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தப்படும், இது சுற்றுலா சார்ந்த வர்த்தகர்களுக்கு ஊக்கம் அளிக்கும். 

துறைமுக கட்டமைப்புகளை மேம்படுத்த முன்னுரிமை  அளிக்கப்படும். உள்நாட்டு சுற்றுலாவை மேம்படுத்தவும், வேலைவாய்ப்பை அதிகரிக்கவும் மாநிலங்களுக்கு வட்டியில்லா கடன் உதவி வழங்கப்படும். லட்சத்தீவில் சுற்றுலா மேம்பாட்டுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று சீதாராமன் மேலும் கூறினார்.

கடந்த 2019-ஆம் ஆண்டில் நாட்டின் நிதியமைச்சராக நிா்மலா சீதாராமன் பதவியேற்றாா். இந்தியாவின் முதல் முழுநேர பெண் நிதியமைச்சா் என்ற பெருமைக்குரிய இவா், இதுவரை 5 முழு பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளாா். இப்போது தொடா்ந்து 6-ஆவது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்தார். 

தோ்தலுக்குப் பிறகு அமையும் புதிய அரசு, 2024-25-ஆம் ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை தாக்கல் செய்யும். அதன்படி, ஜூலையில் முழு பட்ஜெட் தாக்கலாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com