ஆயுஷ்மான் காப்பீடு திட்டம் அங்கன்வாடி, தூய்மைப் பணியாளர்களுக்கும் விரிவுப்படுத்தப்படும்: நிர்மலா சீதாராமன்

ஆயுஷ்மான் காப்பீடு திட்டம் அனைத்து அங்கன்வாடி மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கும் விரிவுப்படுத்தப்படும் என்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வியாழக்கிழமை தெரிவித்தார்.
ஆயுஷ்மான் காப்பீடு திட்டம் அங்கன்வாடி, தூய்மைப் பணியாளர்களுக்கும் விரிவுப்படுத்தப்படும்: நிர்மலா சீதாராமன்


புது தில்லி: ஆயுஷ்மான் காப்பீடு திட்டம் அனைத்து அங்கன்வாடி மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கும் விரிவுப்படுத்தப்படும் என்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வியாழக்கிழமை தெரிவித்தார்.

ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி-ஜன் ஆரோக்யா யோஜனா என்பது உலகின் மிகப் பெரிய பொது நிதியுதவி அளிக்கப்பட்ட மருத்துவக் காப்பீட்டுத் திட்டமாகும், இது இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை பராமரிப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் வரை பலன் வழங்கப்படுகிறது. 

இந்தத் திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு டிசம்பர் 27 ஆம் தேதி வரை நாடு முழுவதும் 12 கோடி குடும்பங்களைச் சேர்ந்த 55 கோடி பேர்  பயன்பெற்றுள்ளனர்.

இந்த திட்டம் அங்கன்வாடி மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கும் விரிவுப்படுத்தப்படும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்யும் போது, நாட்டின் வரி விகிதங்களில் எந்தவித மாற்றமும் இல்லை என்று  நிர்மலா சீதாராமன் கூறினார்.

கடந்த 2019-ஆம் ஆண்டில் நாட்டின் நிதியமைச்சராக நிா்மலா சீதாராமன் பதவியேற்றாா். இந்தியாவின் முதல் முழுநேர பெண் நிதியமைச்சா் என்ற பெருமைக்குரிய இவா், இதுவரை 5 முழு பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளாா். இப்போது தொடா்ந்து 6-ஆவது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்தார். 

தோ்தலுக்குப் பிறகு அமையும் புதிய அரசு, 2024-25-ஆம் ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை தாக்கல் செய்யும். அதன்படி, ஜூலையில் முழு பட்ஜெட் தாக்கலாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com