நெல்லை மாவட்டத்தில் மிதமான மழை: மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

நெல்லை மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை முதல் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் மிதமான மழை: மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

நெல்லை மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை முதல் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை (பிப்.1-2) தமிழகத்தில் தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

மேலும், தமிழகத்தின் ஏனைய பகுதிகளில் வட வானிலை நிலவக்கூடும். உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை நேரத்தில் லேசான பனிமூட்டத்துக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் கடந்த 45 நாள்களுக்கு மேலாக மழை இல்லாமல் வெயில் அடித்து வந்த நிலையில் வியாழக்கிழமை காலை முதல் நெல்லை மாவட்டம் முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்த நிலையில், தற்போது மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது.

பாளையங்கோட்டை டவுன், சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம், ரெட்டியார்பட்டி, வள்ளியூர் உள்பட அனைத்து பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.

மாவட்டம் முழுவதும் பரவலாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வருவதால் இன்று முழுவதும் மழை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நெல்லை மாவட்டத்தில் கடந்த டிசம்பர் மாதம் பெய்த கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com