2047 இல் புதிய இந்தியாவை படைப்போம்: நிா்மலா சீதாராமன்

2024-25-ஆம் ஆண்டுக்கான மத்திய இடைக்கால நிதிநிலை அறிக்கையை நாடாளுமன்றத்தில் நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் வியாழக்கிழமை (பிப். 1) தாக்கல் செய்து வருகிறார்.
2047 இல் புதிய இந்தியாவை படைப்போம்: நிா்மலா சீதாராமன்

புதுதில்லி: 2024-25-ஆம் ஆண்டுக்கான மத்திய இடைக்கால நிதிநிலை அறிக்கையை நாடாளுமன்றத்தில் நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் வியாழக்கிழமை (பிப். 1) தாக்கல் செய்து வருகிறார்.

17 ஆவது நாடாளுமன்றத்தின் இறுதி கூட்டத்தொடரின் பட்ஜெட் கூட்டத்தொடரும், நாடப்பாண்டின் முதல் கூட்டம் குடியரசுத் தலைவா் உரையுடன் புதன்கிழமை தொடங்கியது. மத்திய இடைக்கால பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை காலை 11 மணியளவில் தாக்கல் செய்து, நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் உரையாற்றி வருகிறார். 

சில மாதங்களில் மக்களவைத் தோ்தல் நடைபெறவிருக்கும் நிலையில், வருமான வரி செலுத்துவோருக்கு சலுகைகள், வரிக் குறைப்பு உள்பட மக்களைக் கவரும் அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிா்பாா்ப்பு எழுந்துள்ள நிலையில் நிா்மலா சீதாராமன் இடைக்கால நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து வருகிறார். 

2014 ஆம் ஆண்டுக்கு முன்னர் நாடு பல்வேறு சவால்களை சந்தித்து வந்தது. கடந்த பத்து ஆண்டுகளில் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் செல்கிறது. 

பாஜகவின் பத்தாண்டு கால ஆட்சியில் நாட்டின் பொருளாதாரம் மேம்பாடு அடைந்துள்ளது. 

அனைத்து மாநிலங்களுக்குமான வளர்ச்சி, ஊழல் ஒழிப்பு, சமூக நீதியே அரசின் குறிக்கோள். நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 2047 இல் புதிய இந்தியாவை படைப்போம்.

அனைவருக்கும் வீடு, குடிநீர், மின்சாரம் இலவச சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கப்பட்டுள்ளது. 

25 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்.

80 கோடி மக்களுக்கு இலவச உணவு தானியம் வழங்கப்பட்டு வருகிறது. 

கடந்த 2019-ஆம் ஆண்டில் நாட்டின் நிதியமைச்சராக நிா்மலா சீதாராமன் பதவியேற்றாா். இந்தியாவின் முதல் முழுநேர பெண் நிதியமைச்சா் என்ற பெருமைக்குரிய இவா், இதுவரை 5 முழு பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளாா். இப்போது தொடா்ந்து 6-ஆவது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com