600 லட்சம் டன் நெல் அரசு கொள்முதல்!

காரீஃப் கோடை-பருவத்தில் விதைக்கப்பட்ட 600 லட்சம் டன் நெல்லை கொள்முதல் செய்துள்ளதாகவும், இதன் மூலம் ரூ.1.3 லட்சம் கோடிக்கு மேல் ஆதரவு விலையாக பெற்ற 75 லட்சம் விவசாயிகள் பயனடைந்தனர். 
கோப்புப்படம்
கோப்புப்படம்

புதுதில்லி: காரீஃப் கோடை-பருவத்தில் விதைக்கப்பட்ட 600 லட்சம் டன் நெல்லை கொள்முதல் செய்துள்ளதாகவும், இதன் மூலம் ரூ.1.3 லட்சம் கோடிக்கு மேல் ஆதரவு விலையாக பெற்ற 75 லட்சம் விவசாயிகள் பயனடைந்தனர் என்று தெரிவிக்கப்பட்டது.

2023-24 கோடை பருவத்தில் இது வரை 600 லட்சம் டன்னுக்கும் அதிகமான நெல் கொள்முதல் நிறைவடைந்துள்ளது. இதன் மூலம் ரூ.1,30,000 கோடிக்கும் அதிகமான குறைந்தபட்ச ஆதரவு விலையை வழங்கும் 75 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.

கொள்முதல் ஆனது 2023 அக்டோபரில் தொடங்கியது என்று அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உணவுச் சட்டம் மற்றும் பிற நலத்திட்டங்களின் கீழ் ரேஷன் கடைகள் மூலம் விநியோகிக்க ஆண்டுக்கு சுமார் 400 லட்சம் டன் அரிசி தேவைப்படும் நிலையில், மத்திய தொகுப்பில் 525 லட்சம் டன் அரிசி உள்ளது.

2024 மார்ச் மாதத்தில் தொடங்கவுள்ள ரபி பருவத்தில் கோதுமை கொள்முதலை அதிகரிக்க அரசு தயாராகி வருகிறது. இதற்காக முக்கிய கோதுமை உற்பத்தி செய்யும் மாநிலங்களுடன் கலந்தாலோசித்து பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com