கடல்களுக்கும் மலைகளுக்கும் நாம் சவால் விடுகிறோம்: மோடி

இந்திய பொருளாதார வளர்ச்சி குறித்தும் ஆட்டோமொபைல் துறை குறித்தும் மோடி பேசியுள்ளார்.
பிரதமர் மோடி | PTI
பிரதமர் மோடி | PTI

பிரதமர் நரேந்திர மோடி, இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருவதாகவும் தனது மூன்றாவது ஆட்சி காலத்தில் உலகின் மூன்றாவது மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட நாடாக இந்தியா மாறியிருக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

நாட்டின் மக்களவை தேர்தல் இந்தாண்டு ஏப்ரல்- மே மாதத்தில் நடைபெறவிருக்கும் நிலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பாரத் மொபைலிட்டி கண்காட்சியில் மோடி பேசியதாவது:

இந்தியா எங்கள் அரசின் மூன்றாவது ஆட்சி காலத்தில் உலகின் மூன்றாவது மிகப்பெரிய பொருளாதாரமாக நிச்சயமாக மாறியிருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி | PTI
பிரதமர் மோடி | PTI

மேலும், 2014-ல் 12 கோடியாக இருந்த வாகன விற்பனை தற்போது 21 கோடியாக மாறியுள்ளது. 2 ஆயிரம் மின் வாகனங்கள் மட்டுமே இருந்தது, பத்தாண்டுகளில் 12 லட்சமாக உயர்ந்துள்ளது. 

மேலும் உள்கட்டுமானத்தில் இந்தியா மேம்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மோடி, “நாம் கடல்கள் மற்றும் மலைகளுக்கு சவால் விடுகிறோம். பொறியியல் கட்டுமான அதிசயங்கள் நிகழ்த்தப்படுகின்றன. அடல் சுரங்கம் முதல் அடல் சேது திட்டம் வரை உதாரணம். கடந்த பத்து ஆண்டுகளில் 75 புதிய விமானங்கள் கட்டப்பட்டுள்ளன. 4 லட்சம் கிராமப்புற சாலைகள் அமைக்கப்படுள்ளன” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், பேட்டரிகள் உள்ளூரில் கிடைக்கும் பொருள்கள் கொண்டே தயாரிக்க அவர் வாகன உற்பத்தியாளர்களிடம் வலியுறுத்தினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com