புதிய உச்சத்தை தொட்ட இந்திய பங்குச் சந்தை!

இன்றைய இன்ட்ரா-டே வர்த்தகத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், இன்போசிஸ், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகளை வாடிக்கையாளர்கள் வாங்கியதால் நிஃப்டி இன்று புதிய உச்சத்தை தொட்டது.
புதிய உச்சத்தை தொட்ட இந்திய பங்குச் சந்தை!

மும்பை : இன்றைய இன்ட்ரா-டே வர்த்தகத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், இன்போசிஸ், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகளை வாடிக்கையாளர்கள் வாங்கியதால் தேசிய பங்குச் சந்தையானது இன்று புதிய உச்சத்தை தொட்டது.

மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 440.33 புள்ளிகள் உயர்ந்து 72,085.63 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 1,444.1 புள்ளிகள் உயர்ந்து 73,089.40 புள்ளிகளாக இருந்தது. தேசிய பங்குச் சந்தையானது 156.35 புள்ளிகள் உயர்ந்து 21,853.80 ஆக இருந்தது.

வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 429.35 புள்ளிகள் உயர்ந்து அதன் புதிய உச்சமான 22,126.80 புள்ளிகள் எட்டியது.

சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள பவர் கிரிட், என்டிபிசி, டாடா ஸ்டீல், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், விப்ரோ, இன்போசிஸ், டெக் மஹிந்திரா, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், பஜாஜ் பைனான்ஸ் உள்ளிட்ட பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாயின.

ஆக்ஸிஸ் வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி, ஹிந்துஸ்தான் யூனிலீவர், லார்சன் & டூப்ரோ மற்றும் ஐடிசி ஆகிய பங்குகள் சரிவில் முடிந்தது.

அதே வேளையில் எண்ணெய் மற்றும் எரிவாயு குறியீடுகள் 4.22 சதவிகிதம், எரிசக்தி 3.44 சதவிகிதம், உலோகம் 2.95 சதவிகிதம், சேவைகள் 2.22 சதவிகிதம், பயன்பாடுகள் 2.18 சதவிகிதம், ஐடி 2.17 சதவிகிதம் மற்றும் மின்சார துறை சார்ந்த நிறுவனங்கள் 1.81 சதவிகிதமும் உயர்ந்து வர்த்தகமானது.

வாராந்திர அடிப்படையில் மும்பை பங்குச் சந்தை பெஞ்ச்மார்க் 1,384.96 புள்ளிகள் உயர்ந்தது, தேசிய பங்குச் சந்தை 501.2 புள்ளிகள் உயர்ந்தது.

சர்வதேச சந்தையில் பிரென்ட் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 0.48 சதவிகிதம் உயர்ந்து 79.08 டாலராக உள்ளது.

அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் நேற்றைய வர்த்தகத்தில் ரூ.1,879.58 கோடி மதிப்பிலான பங்குகளை விற்றுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com