பாஜகவை எதிர்த்துப் போராட அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்: ஜெய்ராம் ரமேஷ்

மக்களவைத் தேர்தலில் பாஜகவை எதிர்த்துப் போராட அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் சனிக்கிழமை தெரிவித்தார். 
பாஜகவை எதிர்த்துப் போராட அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்
பாஜகவை எதிர்த்துப் போராட அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்

மக்களவைத் தேர்தலில் பாஜகவை எதிர்த்துப் போராட அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் சனிக்கிழமை தெரிவித்தார். 

ராகுலின் இந்திய ஒற்றுமை நீதி நடைப்பயணம் தற்போது மேற்குவங்கத்தில் நடைபெற்று வருகின்றது. இதையடுத்து, ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், 

மக்களவை தேர்தலில் காங்கிரஸ் 40 இடங்களையாவது காங்கிரஸ் பெறுமா என்று கொல்கத்தா பேரணியில் உரையாற்றிய மம்தா கூறியுள்ள நிலையில், எதிர்க்கட்சியான இந்தியா கூட்டணியில் ஒரு பகுதியாக நாங்கள் இருப்பதாகக் கருதுகிறோம் என்றும் அவர் கூறினார். 

பாஜகவை எதிர்த்துப் போராடுவதே எங்கள் முன்னுரிமை. நாம் அனைவரும் ஒன்று சேர்ந்தால் நல்லது என்று நினைக்கிறேன். பாட்னா, பெங்களூரு மற்றும் மும்பையில் ஒன்றாக இருந்தோம். ஏதோ நடந்துள்ளது. அதன் காரணமாகவே முதலில் சிவசேனா பிளவுபட்டது. பின்னர் நிதிஷ்குமார் இந்தியா கூட்டணியிலிருந்து விலகினார்.

இது உள்ளாட்சி அளவிலான தேர்தல் அல்ல என்பதை நாம் உணர வேண்டும் என்று மம்தா கருத்து தெரிவித்துள்ளார்.

எனவே, பாஜகவை எதிர்த்துப் போராட அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என்பதை வலியுறுத்துகிறேன் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com