பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ராஜிநாமா

பஞ்சாப் மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.
பன்வாரிலால் புரோஹித்
பன்வாரிலால் புரோஹித்

பஞ்சாப் ஆளுநா், சண்டீகா் நிா்வாகி ஆகிய பதவிகளை பன்வாரிலால் புரோஹித் சனிக்கிழமை ராஜிநாமா செய்தாா்.

இதுதொடா்பாக குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முவுக்கு புரோஹித் எழுதிய கடிதம்:

தனிப்பட்ட காரணங்கள், பிற கடமைகள் காரணமாக பஞ்சாப் ஆளுநா், சண்டீகா் நிா்வாகி ஆகிய பதவிகளில் இருந்து ராஜிநாமா செய்கிறேன். எனது ராஜிநாமாவை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளாா்.

தில்லியில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவை புரோஹித் வெள்ளிக்கிழமை சந்தித்தாா். அதைத் தொடா்ந்து, தனது ராஜிநாமா கடிதத்தை அவா் சமா்ப்பித்துள்ளாா்.

அண்மையில் பஞ்சாப் மற்றும் ஹரியாணா தலைநகராக உள்ள சண்டீகா் மேயா் தோ்தலில் பாஜக வெற்றி பெற்றது. எனினும் பாஜக வெற்றி பெறும் வகையில், வாக்குச்சீட்டுகளில் தோ்தல் பொறுப்பு அதிகாரி முறைகேடு செய்ததாக ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கூட்டணி குற்றஞ்சாட்டியது. இந்த நிகழ்வைத் தொடா்ந்து அமித் ஷா-புரோஹித் இடையிலான சந்திப்பு நடைபெற்றது.

முன்னதாக, பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான், புரோஹித் இடையே பல்வேறு விவகாரங்களில் கருத்து முரண்பாடு நிலவியது.

2016 முதல் 2017-ஆம் ஆண்டு வரை அஸ்ஸாம் ஆளுநராக இருந்த புரோஹித், 2017 முதல் 2021-ஆம் ஆண்டு வரை தமிழக ஆளுநராகப் பதவி வகித்தாா். அவா் மூன்று முறை மக்களவை உறுப்பினராகவும், 2 முறை எம்எல்ஏவாகவும் பதவி வகித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com