வனத்துறை காவலர்கள் குழுவுக்கும் தேக்கு மரக் கடத்தல்காரர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. மத்திய பிரதேசம் விதிஷா மாவட்டத்தில் அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின்போது இந்த மோதல் உருவானது. 50 பேர் மீது அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ஒன்பது இருசக்கர வாகனங்கள் சோதனைக்குப் பிறகு பறிமுதல் செய்யப்பட்டன.
கொலுவா பத்தர் பகுதியில் சோதனையிட சென்ற வனத்துறை அதிகாரிகளைத் தேக்கு மரக் கடத்தலில் ஈடுபட்டு வந்த 50 பேர் தாக்கியதாகவும் மோதலுக்கு பிறகு அங்கிருந்து அவர்கள் தப்பிச் சென்றதாகவும் காவலர்கள் தெரிவித்தனர்.
அவர்கள் விட்டு சென்ற 9 இருசக்கர வாகனங்கள் ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள 32 தேக்கு மரக் கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதையும் படிக்க: தில்லி முதல்வருக்கு நோட்டீஸ்: இல்லத்துக்கு காவலர்கள் வருகை
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.