பாஜக கூட்டணியில் சேரச் சொல்லி அழுத்தம் தருகிறார்கள்: கேஜரிவால் குற்றச்சாட்டு

பாஜக கூட்டணியில் இணையச்சொல்லி தங்களுக்கு அழுத்தம் கொடுக்கப்படுவதாக குற்றம்சாட்டி உள்ள தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால்
பாஜக கூட்டணியில் சேரச் சொல்லி அழுத்தம் தருகிறார்கள்: கேஜரிவால் குற்றச்சாட்டு


புதுதில்லி: பாஜக கூட்டணியில் இணையச்சொல்லி தங்களுக்கு அழுத்தம் கொடுக்கப்படுவதாக குற்றம்சாட்டி உள்ள தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், ஆம் ஆத்மிக்கு எதிராக பாஜக எந்த சதியில் ஈடுபட்டாலும் நாங்கள் அந்த தவறை செய்யமாட்டோம். நாங்கள் எந்த தவறும் செய்யாதவர்கள் என்று அவர் கூறினார். 

தில்லி கிராரியில் இரண்டு பள்ளிகளுக்கு புதிய கட்டடத்திற்கு ஞாயிற்றுக்கிழமை அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்து பேசிய தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், பாஜக கூட்டணியில்  தன்னையும் மற்ற ஆம் ஆத்மி கட்சித் தலைவர்களையும் இணையச்சொல்லி அழுத்தம் கொடுப்பதாகவும்,ஆனால் நாங்கள் எந்தத் தவறும் செய்யாதவர்கள் என்பதால் அந்த தவறை செய்ய மாட்டோம் என்பதில் உறுதியாக இருப்பதாகவும் கூறினார்.

மேலும், "அவர்கள் எங்களுக்கு எதிராக எந்த சதியை செய்ய முயன்றாலும், அதனால் எதுவும் நடக்கப் போவதில்லை.நாங்கள் அவர்களுக்கு எதிராக உறுதியாக நிற்கிறேன், நாங்கள் அதற்கு அடிபணிய மாட்டோம்.

பாஜகவில் சேருங்கள், உங்களை சும்மா விடுகிறோம்' என கூறுகின்றனர். ஆனால் நாங்கள் ஒருபோதும் பாஜகவில் சேரமாட்டேன்.

நாங்கள் ஏன் பாஜகவில் சேர வேண்டும்? கேள்வி எழுப்பிய கேஜரிவால்,  நீங்கள் பாஜக  கூட்டணியில் இணைந்தால், எல்லா பாவங்களும் மன்னிக்கப்படும்" என்று கூறினார்.

மேலும், தேசிய தலைநகரில் உள்ள பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளை மேம்படுத்த தாங்கள் பணியாற்றி வருவதாகவும், அதில் என்ன தவறு உள்ளது என்றும் முதல்வர் கூறினார்.

பின்னர் எக்ஸ் வலைதள பக்கத்தில், ஆம் ஆத்மி தலைவர்களுக்கு எதிரான அனைத்து வழக்குகளும் பொய்யானவை என்று கேஜரிவால் தெரிவித்தார்.

"நாங்கள் ஏதாவது தவறு செய்திருந்தால், வழக்குகளை முடித்துக்கொண்ட மற்றவர்களைப் போல நாமும் பாஜகவில் இணைந்திருப்போம்.

நாங்கள் எந்த தவறும் செய்யாத போது, ஏன் பாஜகவில் சேர வேண்டும்? எங்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகள் அனைத்தும் பொய்யானவை. இன்று இல்லை என்றாலும் வரும் நாள்களில் அனைத்து வழக்குகளும் முடிந்துவிடும்" என்று ஹிந்தியில் பதிவிட்டுள்ளார்.

தில்லியில் வளர்ச்சிப் பணிகள் நிறுத்தப்படாது என்றும், உயிருடன் இருக்கும் வரை நாட்டிற்கும் சமூகத்திற்கும் தொடர்ந்து சேவை செய்வோம் என்றும் அவர் கூறினார்.

மக்களை திசை திருப்புகிறார்
கேஜரிவாலின் குற்றச்சாட்டை தில்லி மக்களை திசை திருப்பும் முயற்சி என்று நிராகரித்துள்ள பாஜக தில்லி தலைவா் வீரேந்தா் சச்தேவா, "அரவிந்த்  கேஜரிவால் விசாரணை அமைப்புகளின் விசாரணைக்கு பயப்படுகிறார், அதனால்தான் அவர் பொய் சொல்கிறார்.

அவர் தில்லி மக்களை திசை திருப்புகிறார், அதனால்தான் அவர் நடக்காத விஷயங்களைப் பற்றி கனவு காண்கிறார்.

ஆம் ஆத்மி எம்எல்ஏக்களை பாஜக வேட்டையாட முயற்சிப்பதாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாக, கேஜரிவால் மற்றும்  அமைச்சர் அதிஷிக்கு தில்லி காவல்துறை குற்றப்பிரிவு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கலால் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் தன்னை விசாரிக்க அமலாக்க இயக்குநரகம் அனுப்பிய சம்மன்களை கேஜரிவால் புறக்கணித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக தேஜரிவாலை பிரசாரத்தில் ஈடுபடவிடாமல் தடுப்பதற்காக அவரை கைது செய்வதற்கான சதி வேலையில் பாஜக ஈடுபட்டுள்ளதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டிய நிலையில், அமலாக்கத் துறை அழைப்பாணைகளை புறக்கணித்த அவரது முடிவு குறித்து பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.

கடந்த வாரம், கட்சியில் இருந்து வெளியேறவும், கேஜரிவால் அரசைக் கவிழ்க்கவும் தனது எம்.எல்.ஏ.க்கள் 7 பேருக்கு தலா ரூ. 25 கோடி வழங்க பாஜக முன்வந்ததாக ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டி இருந்தது. முதல்வா் கேஜரிவால் ‘எக்ஸ்’ ஊடகத்தளத்தில் வெளியிட்ட இடுகையில் குற்றம்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

பாஜக மீதான கேஜரிவாலின் குற்றச்சாட்டு இந்திய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com