தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்ட ஜார்க்கண்ட் கோயில்!

ஜார்க்கண்ட் கும்லா மாவட்டத்தில் உள்ள டெரகோட்டா கோயிலை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச்சின்னமாக அறிவிக்க அடையாளம் காணப்பட்டுள்ளது.
தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்ட ஜார்க்கண்ட் கோயில்!
Published on
Updated on
1 min read

புதுதில்லி:  ஜார்க்கண்ட் கும்லா மாவட்டத்தில் உள்ள டெரகோட்டா கோயிலை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச்சின்னமாக அறிவிக்க அடையாளம் காணப்பட்டுள்ளது.

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் ஜி கிஷன் ரெட்டி இதனைத் தெரிவித்தார்.

தற்போது 3,697 பண்டைய நினைவுச்சின்னங்கள் மற்றும் தொல்பொருள் தளங்கள் மற்றும் எச்சங்கள் தேசிய முக்கியத்துவம் வாய்ந்தவை மற்றும் இந்திய தொல்பொருள் ஆய்வகத்தின் கீழ் உள்ளன.

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த தளங்களாக அதிக தளங்களை சேர்க்கும் திட்டம் உள்ளதா என்று ரெட்டியிடம் கேட்ட போது, கும்லா மாவட்டத்தில் உள்ள தோய்சா நகரில் உள்ள சுடுமண்(டெரகோட்டா) கோயில் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச்சின்னமாக அறிவிக்க அடையாளம் காணப்பட்டுள்ளது என்றாலும், ஷாப்பூர் கோட்டை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச் சின்னங்களின் பட்டியலில் வரவில்லை என்றார்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் 13 பண்டைய நினைவுச் சின்னங்கள், தொல்லியல் தளம் மற்றும் எஞ்சிய எச்சங்கள் தேசிய முக்கியத்துவம் வாய்ந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் ஜார்க்கண்டில் இந்த தளங்களின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்புக்கான செலவு குறித்த தரவுகளையும் ரெட்டி பகிர்ந்து கொண்டார். 2018-19ல் செலவு ரூ.86 லட்சம் எனவும், 2020-21ல் அது ரூ.88 லட்சமாகவும், 2022-23ல் அது ரூ.2 கோடியாகவும் இருந்தது.

பீகாரில் உள்ள 70 தொல்லியல் தளங்கள் குறித்தும் கேட்டபோது, கடந்த ஐந்து ஆண்டுகளில் பீகாரில் இந்த இடங்களின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்புக்காக செலவிடப்பட்ட விவரங்களையும் அவர் பகிர்ந்து கொண்டார். 2018-19ல் செலவின எண்ணிக்கை ரூ.1.76 கோடியாகவும், 2020-21ல் ரூ.1.23 கோடியாகவும், 2022-23ல் ரூ.9 கோடியாகவும் இருந்தது.

பீகாரில் உள்ள ஐந்து நினைவுச் சின்னங்களிலிருந்து டிக்கெட் மூலம் சேகரிக்கப்பட்ட வருவாய் குறித்த தரவுகளையும் பகிர்ந்து கொண்ட ரெட்டி, இந்த தொகை 2020-21ல் ரூ.87 லட்சமாகவும், 2022-23ல் ரூ.3.89 கோடியாக உள்ளது என்றார்.

மற்றொரு கேள்விக்கு பதிலளித்த ரெட்டி, பாஸ்கராச்சார்யா இன்ஸ்டிடியூட் ஃபார் ஸ்பேஸ் அப்ளிகேஷன் அண்ட் ஜியோஇன்ஃபர்மேடிக்ஸ் உடன் தொழில்நுட்ப ஒத்துழைப்புடன், ஏ.எஸ்.ஐ செப்டம்பர் மாதம், 'இந்திய பாரம்பரியம்', என்ற மொபைல் பயன்பாட்டை அறிமுகப்படுத்தியது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com