கேரள மதுபானங்களுக்கு கலால் வரி உயர்வு!

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வெளிநாட்டு மதுபானங்களுக்கான கலால் வரி விதிப்பில் மாற்றங்களை செய்து கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.
கேரள மதுபானங்களுக்கு கலால் வரி உயர்வு!

    
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வெளிநாட்டு மதுபானங்களுக்கான கலால் வரி விதிப்பில் மாற்றங்களை செய்து கேரள அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் லிட்டருக்கு ரூ.10 வரை கலால் வரி உயர்த்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தின் வருவாயை உயர்த்தும் நோக்கத்தில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வெளிநாட்டு மதுபானங்களுக்கு மட்டும் கலால் வரியை கேரள அரசு உயர்த்தியுள்ளது. 

கேரள மாநிலத்தின் வருவாயை பெருக்கும் நோக்கத்தில் அம்மாநில அரசு தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது. பலரின் எதிர்ப்புகளுக்கிடையே கேரள சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படுகிறது. 

இதனிடையே மாநிலத்தின் வருவாயை கூடுதலாக்கும் நோக்கத்தில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வெளிநாட்டு மதுபானங்களுக்கான கலால் வரியை லிட்டருக்கு ரூ.10 வரை கேரள அரசு உயர்த்தியுள்ளது. இதன்மூலம் மாநிலத்துக்கு கூடுதலாக ரூ.200 கோடி வருவாய் கிடைக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. 

கலால் வரி உயர்த்தப்படவுள்ள பிராண்டு மதுபானங்கள் குறித்த பட்டியல் குறித்து தகவல் ஏதும் தெரிவிக்கப்படவில்லை. இதேபோன்று இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வெளிநாட்டு மதுபானங்களுக்கான செஸ் வரியையும் ரூ.20 வரை நிர்ணயித்துள்ளது. இது ரூ.500 - 999 வரையிலான மதுபானங்களுக்கு மட்டும் பொருந்தும். அதற்கு மேல் விலையுடைய மதுபானங்களுக்கு செஸ் வரி ரூ.40 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம் முன்பு இருந்த விலையை விட ரூ.30 முதல் ரூ.50 வரை கூடுதலாக விலைக் கொடுத்து இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வெளிநாட்டு மதுபானங்களை வாங்க வேண்டிய சூழல் ஏற்படும். 

சமீபத்தில் மதுபானங்கள் மீதான விற்பனை வரியையும் மாநில அரசு மாற்றியமைத்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com