ஹிமாசலில் தொடரும் கடும் பனிப்பொழிவு: 645 சாலைகள் மூடல்!

ஹிமாசல பிரதேசத்தில் கடும் பனிப்பொழிவு, மழை தொடர்வதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
ஹிமாசலில் தொடரும் கடும் பனிப்பொழிவு
ஹிமாசலில் தொடரும் கடும் பனிப்பொழிவு


ஹிமாசல பிரதேசத்தில் கடும் பனிப்பொழிவு, மழை தொடர்வதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. சுமார் 645 சாலைகள் மூடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

இதுகுறித்து மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 

மாநிலத்தில் கடந்த ஒரு மாதமாகக் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகின்றது. மாநிலத்தில் 4 தேசிய நெடுஞ்சாலைகள் உள்பட மொத்தம் 645 சாலைகள் மூடப்பட்டுள்ளன. 

மாநில தலைவர் சிம்லாவில் 242 சாலைகள், லாஹுல்-ஸ்பிடியில் 157, குலுவில் 93, மண்டியில் 51, சம்பாவில் 61 சாலைகள் மூடப்பட்டுள்ளன. 

மேலும் 1,416 மின்மாற்றிகள் மற்றும் 52 நீர் விநியோக திட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன. 

கடந்த 24 மணி நேரத்தில், சிர்கான் 35 செ.மீ, காத்ராலா 30 செ.மீ, மணாலி 23.6 செ.மீ, நர்கண்டா 20 செ.மீ, கோண்ட்லா 16.5 செ.மீ, கீலாங் 15.2 செ.மீ, ஷிலாரூ 15 செ.மீ, சாங்லா 8.2 செ.மீ. பனிப்பொழிவு பதிவாகியுள்ளது. 

இந்த பனிப்பொழிவு அடுத்த ௬ நாள்களுக்கு தொடரும் எனவும், அதன்பிறகு பனிப்பொழிவு குறைய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com