இந்திய நீதிமன்றங்களில் 5 கோடி நிலுவை வழக்குகள்!

நாட்டில் உள்ள நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 5 கோடியை கடந்துள்ளது.
உச்சநீதிமன்றம் (கோப்புப் படம்)
உச்சநீதிமன்றம் (கோப்புப் படம்)

நாட்டில் உள்ள நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 5 கோடியை கடந்துள்ளது.

உச்சநீதிமன்றத்தில் மட்டும் ஜனவரி மாத நிலவரப்படி, 80,221 வழக்குகள் நிலுவையில் உள்ளது. கடந்த 5 ஆண்டுகள் நிலவரப்படி நிலுவையில் இருக்கும் வழக்குகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. 2020-ஆம் ஆண்டு ஜனவரி மாத நிலவரப்படி உச்சநீதிமன்றத்தில் 59,859 வழக்குகள் நிலுவையில் இருந்தது.

கடந்த மாதம் மட்டும் 1,966 வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், 2,420 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளது. பொது விடுமுறையை தவிர்த்து 20 நாள்களில் நாளொன்றுக்கு 121 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளது.

மேலும், நாட்டில் உள்ள உயர்நீதிமன்றங்களில் 62 லட்சம் வழக்குகளும், மாவட்டம் மற்றும் தாலுகா நீதிமன்றங்களில் 4.47 லட்சம் வழக்குகளும் நிலுவையில் உள்ளது.

இதில், 30 ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 1.10 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com