சரத் பவாருக்கு புதிய கட்சிப் பெயர்: இந்திய தேர்தல் ஆணையம்

தேசியவாத காங்கிரஸ் கட்சி - சரத்சந்திர பவார் என்ற பெயரை சரத் பவார் தரப்பினர் வைத்துக்கொள்ள இந்திய தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.
கோப்புப் படம்
கோப்புப் படம்

சரத் பவார் தரப்புக்கு புதிய கட்சிப் பெயரை இந்திய தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது. 

தேசியவாத காங்கிரஸ் கட்சி - சரத்சந்திர பவார் என்ற பெயரை சரத் பவார் தரப்பினர் வைத்துக்கொள்ள இந்திய தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.

அஜித் பவார் தலைமையிலான பிரிவுக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பெயர் மற்றும் அதன் கடிகாரம் சின்னம் ஆகிய இரண்டும் அஜித் பவாருக்கே சொந்தம் என இந்திய தேர்தல் ஆணையம் நேற்று (பிப். 6) இரவு அறிவித்தது.

மகாராஷ்டிரத்தில் சிவசேனை, காங்கிரஸுடன் கூட்டணி வைத்து ஆட்சியைப் பிடித்த தேசியவாத காங்கிரஸ் கட்சியில் கடந்த 2022 ஜூலை மாதம் சரத் பவார் பிரிவு, அஜித் பவார் பிரிவு என பிளவு ஏற்பட்டது. 

53 எம்.எல்.ஏ.க்களை கொண்ட தேசியவாத காங்கிரஸ் கட்சியில் 41 எம்.எல்.ஏ.க்கள் அஜித் பவாருக்கும், 12 பேர் சரத் பவாருக்கும் ஆதரவு தெரிவித்தனர்.

சிவசேனை கட்சி உடைந்து அக்கட்சியின் மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணி பாஜகவுடன் இணைந்து ஆட்சியைக் கைப்பற்றியது. அந்த அணியுடன் அஜித் பவார் தரப்பு தேசியவாத காங்கிரஸ் இணைந்து துணை முதல்வர் பதவியை கைப்பற்றியது. 8 அமைச்சர்கள் உள்பட அஜித் பவார் துணை முதல்வராக பொறுப்பேற்றார். 

இதனிடையே தாங்கள்தான் உண்மையான தேசியவாத காங்கிரஸ் என அஜித் பவர் தேர்தல் ஆணையத்தில் முறையிட்டார். இந்த விவகாரத்தில் நேற்று இறுதி முடிவு அறிவித்த தேர்தல் ஆணையம், அஜித் பவாருக்கே தேசியவாத காங்கிரஸ் கட்சியும் சின்னமும் சொந்தம் எனக் குறிப்பிட்டது. 

இந்நிலையில், சரத் பவார் தரப்புக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சி - சரத்சந்திர பவார் என்ற பெயரை இந்திய தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது. 

மகாராஷ்டிரத்தில் 6 மாநிலங்களவை எம்.பி. பதவிக்கு தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், சரத் பவார் தரப்புக்கு புதிய பெயர் வழங்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com