மக்களவைத் தேர்தலில் கோலோச்சப்போவது யார்? இந்தியா டுடே கருத்துக் கணிப்பு

மக்களவைத் தேர்தல் நெருங்கவிருக்கும் நிலையில், இந்தியா டுடே தனது தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பை வெளியிட்டிருக்கிறது.
மக்களவைத் தேர்தலில் கோலோச்சப்போவது யார்? இந்தியா டுடே கருத்துக் கணிப்பு


புது தில்லி: மக்களவைத் தேர்தல் நெருங்கவிருக்கும் நிலையில், இந்தியா டுடே தனது தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பை வெளியிட்டிருக்கிறது.

நாடு முழுவதும் தேர்தல் களம் பரபரப்பாகி வரும் நிலையில் இந்தியா டுடே மற்றும் டைம்ஸ் நவ் ஆகிய ஊடகங்கள் அடுத்தடுத்து தேர்தல் கருத்துக் கணிப்புகளை வெளியிட்டுள்ளன.

இது குறித்து இந்தியா டுடே கூறியிருப்பதாவது, சுமார் 35 ஆயிரம் பேரிடம் நடத்திய கருத்துக் கணிப்பானது 2023 டிசம்பர் முதல் 2024ஆம் ஆண்டு ஜனவரி வரை நடத்தப்பட்டுள்ளது.

இந்தியா டுடே வெளியிட்டிருக்கும் கருத்துக் கணிப்பில்,  தமிழகத்தில் மொத்தமுள்ள 39 மக்களவைத் தொகுதிகளிலும் இந்தியா கூட்டணியே கைப்பற்றி மகத்தான வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுபோல, கேரளத்திலும் 20 தொகுதிகளையும் இந்தியா கூட்டணியே பிடிக்கும் என்றும் கருத்துக் கணிப்புகள் தெரிவிப்பதாகக் கூறப்படுகிறது.

கர்நாடகத்தில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் பாஜக கூட்டணி 24 தொகுதிகளிலும், இந்தியா கூட்டணி 4  தொகுதிகளிலும் வெல்லும் என்று கூறப்படுகிறது.

தில்லியில் மொத்தமுள்ள 7 மக்களவைத் தொகுதிகளையும் பாஜக கூட்டணியே கைப்பற்றும் என்றும் தெலங்கானாவில் இந்தியா கூட்டணி 9 தொகுதிகளையும் பாஜக கூட்டணி 5 தொகுதிகளையும் கைப்பற்றும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 42 தொகுதிகளில் திரிணமூல் காங்கிரஸ் 22 தொகுதிகளையும் பாஜக கூட்டணி 18 தொகுதிகளையும் கைப்பற்றும் என்று கருத்துக் கணிப்பு வெளியாகியிருக்கிறது.

பிகாரில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டண மொத்தமுள்ள 40 தொகுதிகளில் 32 தொகுதிகளை வெல்லும் என்றும், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 8 தொகுதிகளைக் கைப்பற்றும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2019ஆம் ஆண்டைக் காட்டிலும் உத்தரப் பிரதேசத்தில் பாஜக கூட்டணி மொத்தமுள்ள 80 தொகுதிகளில் 70 தொகுதிகளை வென்று சாதனை படைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2019ல் 62 தொகுதிகளை வென்றிருந்தது.

இந்த கணிப்புகள் எல்லாம் தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள்தான் என்றும், இவை மாறக்கூடும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com