இசையமைப்பாளர் பியாரிலால் சர்மாவுக்கு லட்சுமி நாராயணா சர்வதேச விருது!

பிரபல இசையமைப்பாளர் பியாரிலால் சர்மாவுக்கு லட்சுமி நாராயணா சர்வதேச விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.
இசையமைப்பாளர் பியாரிலால் சர்மாவுக்கு லட்சுமி நாராயணா சர்வதேச விருது!

புதுதில்லி: பிரபல இசையமைப்பாளர் பியாரிலால் சர்மாவுக்கு லட்சுமி நாராயணா சர்வதேச விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.

83 வயதான பியாரிலால் சர்மாவுக்கு குடியரசு நாளன்று இந்தியாவின் மூன்றாவது மிக உயர்ந்த சிவிலியன் விருதான பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டது.

33 ஆண்டுகளாக நடைபெற்றும் வரும் லட்சுமிநாராயணா குளோபல் இசை விழாவின் ஒரு பகுதியாக லட்சுமிநாராயணா சர்வதேச விருதை இசைக்கலைஞர்கள் எல்.சுப்ரமணியம் மற்றும் கவிதா கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியம் ஆகியோர் தொழில்துறையின் மூத்த தலைவருக்கு வழங்கி கெளரவித்தனர். சிறந்த இசையமைப்பாளர், இசை ஏற்பாட்டாளர் மற்றும் வயலின் கலைஞருக்கு இந்த விருதை வழங்கியதில் மிகப்பெரிய கெளரவம் அடைகிறேன் என்றனர்.

எல்.பி. என்று ரசிகர்களால் அன்பாக அழைக்கப்படும் பியாரிலால் சர்மா மற்றும் அவரது இசை ஒத்துழைப்பாளர் லட்சுமி காந்த் குடல்கர் ஆகியோர் 35 ஆண்டுகளுக்கும் மேலாக தங்கள் வாழ்க்கையில் தோ ராஸ்தே, தாக், பாபி, அமர் அக்பர் அந்தோணி மற்றும் கர்ஸ் உள்ளிட்ட 700 க்கும் மேற்பட்ட படங்களுக்கு ஒலிப்பதிவு செய்துள்ளார்.

லட்சுமி காந்த் மறைவு பிறகு, 2007ல் ஓம் சாந்தி ஓம்,  தூம் தானா ஆகிய பாடல்களுக்கு பியாரிலால் இசை அமைப்பாளராக பணியாற்றினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com