சாவர்க்கர், பால் தாக்கரேவை மறந்துவிட்டது மத்திய அரசு: சஞ்சய் ரௌத்

பாரத ரத்னா விருதுகளை அறிவிக்கும் போது சாவர்க்கர், பால்தாக்கரே ஆகியோரை மோடி அரசு மறந்துவிட்டதாக சஞ்சய் ராவத் குற்றஞ்சாட்டியுள்ளார்.
சஞ்சய் ரௌத்
சஞ்சய் ரௌத்

பாரத ரத்னா விருதுகளை அறிவிக்கும் போது சாவர்க்கர், பால் தாக்கரே ஆகியோரை மோடி அரசு மறந்துவிட்டதாக சஞ்சய் ராவத் குற்றஞ்சாட்டியுள்ளார்.

முன்னாள் பிரதமர்கள் சௌத்ரி சரண் சிங், பி.வி.நரசிம்ம ராவ் மற்றும் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுகிறது. இந்தத் தகவலை பிரதமர் மோடி இன்று வெளியிட்டுள்ளார். ஏற்கெனவே பிகார் முன்னாள் முதல்வர்  கர்பூரி தாக்குர், பாஜக மூத்த தலைவர் அத்வானி ஆகிய இருவருக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று மேலும் 3 பேருக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டது. 

இந்த நிலையில் பாரத ரத்னா விருதுகளை அறிவிக்கும் போது சாவர்க்கர், பால்தாக்கரே ஆகியோரை மோடி அரசு மறந்துவிட்டதாக சிவசேனை (உத்தவ் பிரிவு) எம்.பி. சஞ்சய் ராவத் குற்றஞ்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளப் பதிவில், பாரத ரத்னா விருதுகளை அறிவிக்கும் போது சாவர்க்கர், பால்தாக்கரே ஆகியோரை மோடி அரசு மீண்டும் மறந்துவிட்டது. 

ஒரு ஆண்டில் மூன்று பேருக்கு பாரத ரத்னா வழங்கப்படுவது வழக்கம், ஆனால் வரவிருக்கும் தேர்தலை கருத்தில்கொண்டு ஐந்து பெயர்களை மோடி அரசு இந்த ஆண்டு அறிவித்துள்ளது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக அதிகபட்ச எண்ணிக்கையாக கடந்த 1999ஆம் 4 பேருக்கு பாரத ரத்னா விருத்து அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com