தந்தைக்கு பாரத ரத்னா விருது வழங்குவதை வரவேற்ற முன்னாள் பிரதமர் மகள்!

நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதுக்கு தனது தந்தைக்கு பெயர் சூட்டப்பட்டதற்கு முன்னாள் பிரதமர் பி.வி.நரசிம்ம ராவின் மகளும், பிஆர்எஸ் எம்.எல்.சி.யான வாணி தேவி பாராட்டு தெரிவித்துள்ளார்.
தந்தைக்கு பாரத ரத்னா விருது வழங்குவதை வரவேற்ற முன்னாள் பிரதமர் மகள்!
Updated on
1 min read


ஹைதராபாத்: நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதுக்கு தனது தந்தைக்கு பெயர் சூட்டப்பட்டதற்கு முன்னாள் பிரதமர் பி.வி.நரசிம்ம ராவின் மகளும், பிஆர்எஸ் எம்.எல்.சி.யான வாணி தேவி பாராட்டு தெரிவித்துள்ளார்.

நாடு கடினமான காலங்களை எதிர்கொண்டபோது பிரதமரான நரசிம்ம ராவ், சீர்திருத்தங்களை செயல்படுத்தினார் என்றார்.

கட்சிகளைத் தாண்டி, நரசிம்ம ராவவை அங்கீகரிப்பதும், பாரத ரத்னா விருது வழங்குவதும் நமது பிரதமர் மோடியின் நல்ல மதிப்புகளையும், நடத்தைகளையும் எடுத்து காட்டுகிறது. எனது தந்தை  சீர்திருத்தங்களைத் தொடங்கினார். அதே வேளையில் பொருளாதாரம் மற்றும் வெளியுறவு போன்ற பல்வேறு துறைகளில் உள்ள பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வுகளைக் கண்டறிந்தார். பொதுமக்களின் உயரிய விருதான பாரத ரத்னா வழங்கி கெளரவிக்க சிறிது தாமதம் ஏற்பட்டாலும் பரவாயில்லை என்றார்.

என தந்தைக்கு பாரத ரத்னா விருது வழங்கி கெளரவிக்கப்படுவதால் தெலுங்கானா மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ள நிலையில் நாங்களும்  உற்சாகமாக உள்ளோம்.

முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர ராவ் தலைமையிலான முந்தைய அரசு தனது தந்தையின் நூற்றாண்டு விழாவை பிரமாண்டமாக கொண்டாடியதற்கும் அவர் மனதார பாராட்டு தெரிவித்தார்.

தென் மாநிலங்களிலிருந்து பிரதமரான முதல் தலைவர் நரசிம்மராவ் என்று அவர் நினைவு கூர்ந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com