பஞ்சாப்: தவறான ரசிது வழங்கியதற்காக விற்பனையாளர்களிடமிருந்து ரூ.3.11 கோடி அபராதம் விதிப்பு!

'பில் லியாவோ இனாம் பாவோ' (பில் கொண்டு வாருங்கள், வெகுமதியைப் பெறுங்கள்) திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்களுக்கு தவறான பில்களை வழங்கியதற்காக பஞ்சாப் அரசு ரூ.3.11 கோடி அபராதம் விதித்துள்ளது.
பஞ்சாப்: தவறான ரசிது வழங்கியதற்காக விற்பனையாளர்களிடமிருந்து ரூ.3.11 கோடி அபராதம் விதிப்பு!

சண்டிகர்: பில் லியாவோ இனாம் பாவோ(பில் கொண்டு வாருங்கள், வெகுமதியைப் பெறுங்கள்) திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்களுக்கு தவறான பில்களை வழங்கியதற்காக பஞ்சாப் அரசு ரூ.3.11 கோடி அபராதம் விதித்துள்ளது.

'பில் லியாவோ இனாம் பாவோ' திட்டம் சரக்கு மற்றும் சேவை வரியின் கீழ் இணக்கத்தை மேம்படுத்துவதையும் அதன் மூலம் வருவாயையும் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

நுகர்வோர் தாங்கள் கொள்முதல் செய்யும் பொருட்களுக்கான ரசீதுகளைப் வணிகர்களிடமிருந்து பெறுவதற்கு ஊக்குவிப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

இந்த திட்டத்தின் கீழ், ஒவ்வொரு மாதமும் 7ஆம் தேதி நடைபெறும் குலுக்கலில் பங்கேற்க நுகர்வோர் தாங்கள் வாங்கியதற்கான ரசீதுகளை மேரா பில் செயலியில் பதிவேற்ற ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

இந்த திட்டத்தின் கீழ் பிப்ரவரி 8ஆம் தேதி வரை பெறப்பட்ட 59,616 ரசீதுகளில் 52,988 ரசீதுகள் சரிபார்க்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட விற்பனையாளர்களுக்கு 1,361 நோட்டீஸ்கள் வழங்கப்பட்டுள்ளன.  பெரோஸ்பூரிலிருந்து அதிகபட்சமாக 189 தவறான ரசீது பெறப்பட்டன, இதற்காக ரூ.34.99 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தவறான ரசிதுகளை வழங்கியதற்காக ரூ.95.95 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டதாக சீமா தெரிவித்துள்ள நிலையில் லூதியானாவிலிருந்து பெறப்பட்ட தவறான ரசிதுகளுக்கு ரூ.95 லட்சமும், அமிர்தசரஸில் இருந்து ரூ.59.72 லட்சமும், ரூப்நகரில் இருந்து ரூ.50.43 லட்சமும் மற்றும் ஜலந்தரில் இருந்து ரூ.33.62 லட்சம் வசூலிக்கப்பட்டது.

இந்த திட்டத்தின் கீழ், 918 நுகர்வோர் டிசம்பர் 2023 இறுதி வரை தங்கள் கொள்முதல் செய்த ரசிதுகளை மேரா பில் செயலியில் பதிவேற்றம் செய்து ரூ.43.73 லட்சம் மதிப்புள்ள பரிசுகளை வென்றுள்ளனர் என்றார் நிதியமைச்சர் ஹர்பால் சிங் சீமா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com