விவசாய சங்கங்களுடன் மத்திய அரசு இன்று பேச்சுவார்த்தை

விவசாயிகள் கோரிக்கைக்கு தீர்வு காண்பது பற்றி இன்று பேச்சுவார்ததைக்கு வர விவசாய சங்க நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
விவசாய சங்கங்களுடன் மத்திய அரசு இன்று பேச்சுவார்த்தை

விவசாயிகள் கோரிக்கைக்கு தீர்வு காண்பது பற்றி இன்று பேச்சுவார்ததைக்கு வர விவசாய சங்க நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இன்று மாலை சண்டிகரில் இந்த பேச்சுவார்ததை நடைபெறும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. பேச்சுவார்த்தையில் மத்திய அமைச்சர்கள் அர்ஜுன் முண்டா, பியூஷ் கோயல், நித்யானந்தராய் ஆகியோர் பங்கேற்பார்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

வேளாண் பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை உத்தரவாத சட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, விவசாய சங்கங்கள் செவ்வாய்கிழமை(பிப்.13) தில்லி சலோ பேரணிக்கு அழைப்பு விடுத்துள்ளது. சம்யுக்தா கிசான் மோச்சா, கிசான் மஜ்தூர் மோர்ச்சா உள்ளிட்ட 200 அமைப்புகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

இருப்பினும், ‘தில்லி சலோ’ பேரணியை பல்வேறு விவசாயிகள் சங்கங்கள் மறுத்துள்ளன. அகில இந்திய கிசான் சபை பொதுச் செயலாளா் ஹன்னன் மொல்லா உள்ளிட்ட விவசாய சங்கங்களின் தலைவா்கள், ‘இந்தப் பேரணிக்கும் எங்களுக்கு சம்பந்தமில்லை’ என்றனா். இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தில்லி எல்லைப் பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் சிங்கு, காசியாபாத், நொய்டா ஆகிய எல்லைப் பகுதிகளிலும் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். ராஜஸ்தான், உ.பி., பிகார், கேரளம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் பங்கேற்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com