நாட்டின் முதல் ஹிந்து கோயில்... அமீரக அதிபருக்கு பிரதமர் நன்றி!

ஐக்கிய அரபு அமீரகத்துக்கு இரண்டு நாள்கள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி சென்றுள்ளார்.
நரேந்திர மோடியை வரவேற்கும் ஷேக் முகமது பின் சயீத்
நரேந்திர மோடியை வரவேற்கும் ஷேக் முகமது பின் சயீத் |டிவிட்டர்

ஐக்கிய அரபு அமீரகத்தில் முதல் ஹிந்து கோயில் சாத்தியமானதற்கு ஷேக் முகமது பின் சயீத் ஆதரவே காரணம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

குஜராத்தில் மகாத்மா மந்திரில் நடைபெற்ற குஜராத் உச்சி மாநாட்டில் கலந்துகொண்டதற்கு நன்றி. என் அழைப்பை ஏற்று மாநாட்டில் கலந்துகொண்டதன் மூலம் மாநாட்டின் மதிப்பு உலகளவில் பன்மடங்கு உயர்ந்தது.

எனக்கு உற்சாகமான வரவேற்பளித்ததற்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். கடந்த 7 மாதங்களில் நாங்கள் 5 முறை சந்தித்துள்ளோம். இது அரிதாக நடக்கக்கூடியது. நானும் இங்கு 7 முறை வருவதற்கான வாய்ப்பைப் பெற்றுள்ளேன்.

அனைத்துத் துறைகளிலும் நாம் முன்னேறிய விதம், ஒவ்வொரு துறையிலும் இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையே ஒரு நட்பு நீடிக்கிறது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் முதல் ஹிந்து கோயில் கட்ட மிக முக்கிய காரணமாக இருந்ததற்கு நன்றி. உங்கள் (ஷேக் முகமது பின் சயீத்) ஆதரவு இல்லாமல் கோயில் கட்டுமானம் சாத்தியமில்லை எனக் குறிப்பிட்டார்.

ஐக்கிய அரபு அமீரகத்துக்கு இரண்டு நாள்கள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி சென்றுள்ளார். இன்று மாலை அபுதாபி சென்ற அவருக்கு விமான நிலையத்தில் ஷேக் முகமது பின் சயீத் நேரில் சென்று வரவேற்றார். அதனைத் தொடர்ந்து பிரதமருக்கு ராணுவ மரியாதையும் அளிக்கப்பட்டது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் மோடி சென்றுள்ள நிலையில் யுபிஐ சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதிபர் ஷேக் முகமது பின் சயீத், யுபிஐ சேவையை பிரதமர் மோடி முன்னிலையில் தொடக்கிவைத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com