இந்தியா
காணாமல் போன 3 நாள்களுக்குப் பிறகு பெண் மீட்பு: உயிரற்ற நிலையில்...
ராஜஸ்தான் மாநிலத்தில் காணாமல் போன பெண் மூன்று நாள்களுக்குப் பிறகு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
ராஜஸ்தான் ஜாலவார் மாவட்டத்தில், மூன்று நாள்களுக்கு முன்பு காணாமல் போன பெண்ணின் உடல், வீட்டுக்கு அருகில் உள்ள கிணற்றில் இருந்து மீட்கப்பட்டதாக அந்த பகுதி காவலர்கள் தெரிவித்தனர்.
செவ்வாய்க்கிழமை அதிகாலை, திறந்த வெளியில் காலை கடனுக்காக வீட்டிலிருந்து சென்ற 14 வயது பெண் மீண்டும் வீட்டுக்கு திரும்பவில்லை.
இது குறித்து பெற்றோர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் பாவனி மண்டி காவலர்கள் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இந்த நிலையில், பெண்ணின் உடல் வீட்டுக்கு அருகே உள்ள கிணற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
உடற்கூராய்வுக்குப் பிறகு பெற்றோரிடம் பெண்ணின் உடலை ஒப்படைத்த காவலர்கள், இது தற்கொலையா, கொலையா அல்லது விபத்தா என்கிற ரீதியில் விசாரணை நடத்தி வருகின்றனர்.