மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை: குலாம் நபி ஆசாத்

வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என முன்னாள் மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை: குலாம் நபி ஆசாத்
Published on
Updated on
1 min read

வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என முன்னாள் மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.

குலாம் நபி ஆசாத் கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, ஜனநாயக முற்போக்கு ஆசாத் என்கிற கட்சியைத் தொடங்கினார். நக்ரோடாவில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்களவைத் தேர்தல் 100 சதவீதம் சரியான நேரத்தில் நடைபெற்று வருகிறது. தேர்தல் ஆணையம் அல்லது அரசுடன் தனக்கு எந்தத் தொடர்பும் இல்லாததால் பேரவைத் தேர்தல் பற்றி மட்டுமே என்னால் யூகிக்க முடியும்.

உச்சநீதிமன்றம் செப்டம்பர் வரை காலக்கெடு விதித்துள்ளதால் அதற்குள் பேரவைத் தேர்தல் நடைபெற வேண்டும். வரும் மக்களவைத் தேர்தலில் எனது கட்சியின் வேட்பாளர்களுக்கு பிரசாரம் செய்ய வேண்டும். நான் போட்டியிட்டால், ஒரு இடத்தில் நிறுத்தப்படுவேன். தேசிய மாநாட்டு கட்சி ஒரு சந்தர்ப்பவாத கட்சி. அவர்கள் ஆட்சிக்கு வந்தால் யாருடனும் கூட்டணி வைப்பார்கள். மிகப்பெரிய அளவில் விவசாயிகள் போராட்டம் நடப்பது இது இரண்டாவது முறையாகும்.

எனவே விவசாயிகள் பிரச்னைகளுக்கு ஒருமுறை தீர்வு காணுமாறு பிரதமரிடம் கேட்டுக்கொள்கிறேன். இது அரசுக்கும் விவசாயிகளுக்கும் நல்லதல்ல. இவ்வாறு அவர் கூறினார். 2014 மக்களவைத் தேர்தலில் தோல்வியடைந்த பிறகு மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதைத் தவிர்த்து வரும் குலாம் நபி ஆசாத், 2024 ஆம் ஆண்டு ஜம்மு-காஷ்மீருக்கு தேர்தல் ஆண்டாக இருக்கும் என்பதால், தனது கட்சியினரை தயார்படுத்துமாறு கேட்டுக் கொண்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com