சண்டீகர் மேயர் தேர்தலில் முறைகேடு! ஒப்புக்கொண்டார் தேர்தல் அதிகாரி!

சண்டீகர் மேயர் தேர்தலில் முறைகேடு செய்ததை தேர்தல் அதிகாரி அனில் மஷிஹ் ஒப்புக்கொண்டுள்ளார்.
அனில் மஷிஹ்
அனில் மஷிஹ்

சண்டீகர் மேயர் தேர்தலில் முறைகேடு செய்ததை தேர்தல் அதிகாரி அனில் மஷிஹ் ஒப்புக்கொண்டுள்ளார்.

8 வாக்குச்சீட்டுகளில் எக்ஸ் (X) எனக் குறிப்பிட்டதாக தேர்தல் நடத்தும் அதிகாரி ஒப்புக்கொண்ட நிலையில், அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க உச்ச நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.

மேயர் தேர்தலில் பதியப்பட்ட அனைத்து வாக்குச் சீட்டுகளையும் நாளை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சண்டீகர் மாநகராட்சியின் மேயர் மற்றும் துணை மேயரை தேர்தெடுக்கும் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஜனவரி 30-ஆம் தேதி நடைபெற்றது.

மொத்தம் பதிவான 36 வாக்குகளில் பாஜக 16 வாக்குகள் மட்டுமே பெற்றிருந்தது. இந்தியா கூட்டணியில் போட்டியிட்ட 12 கவுன்சிலர்களின் வாக்குகள் செல்லாது என்று அறிவித்து, பெரும்பான்மைக்கு குறைவாக இடங்களை பெற்ற பாஜக வெற்றி பெற்றதாக தேர்தல் நடத்தும் அதிகாரி அறிவித்தார்.

தேர்தல் முடிவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஆம் ஆத்மி - காங்கிரஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவின் மீதான விசாரணை இன்று நடைபெற்றது.

இதில் தேர்தல் அதிகாரியிடம் சரமாரியான கேள்விகளை நீதிமன்றம் முன்வைத்தது. உண்மையாக பதிலளிக்கவில்லை என்றால், சட்டப்படி நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் எனவும் நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.

இதனைத் தொடர்ந்து சண்டீகர் மேயர் தேர்தலில் முறைகேடுகள் நடந்ததை தேர்தல் அதிகாரி ஒப்புக்கொண்டார்.

அடையாளத்துக்காக 8 வாக்குச்சீட்டுகளில் எக்ஸ் எனக் குறிப்பிட்டதாக தேர்தல் நடத்தும் அதிகாரி ஒப்புக்கொண்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com