காங்கிரஸ் கொடி
காங்கிரஸ் கொடி

இந்தியா கூட்டணியில் தொகுதிப் பங்கீடுஎந்த நேரத்திலும் இறுதி செய்யப்படும்: காங்கிரஸ்

புது தில்லி: இந்தியா கூட்டணியில் உள்ள பிற கட்சிகளுடன் மக்களவைத் தோ்தல் தொகுதிப் பங்கீடு பேச்சுவாா்த்தை நடைபெற்று வருகிறது. எந்த நேரத்திலும் இது இறுதி செய்யப்படுமென காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக தில்லியில் உள்ள கட்சி தலைமையகத்தில் செய்தியாளா்களுக்கு செவ்வாய்க்கிழமை பேட்டியளித்த காங்கிரஸ் பொதுச் செயலா் கே.சி.வேணுகோபால், ‘கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்த காங்கிரஸ் தலைவா்களை உள்ளடக்கிய குழுவை கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே நியமித்துள்ளாா்.

தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவாா்த்தைகள் நடைபெற்று வருகிறது. எந்த நேரத்தில் வேண்டுமானாலும் இது இறுதிசெய்யப்படும். சமாஜவாதி உடனான தொகுதிப் பங்கீட்டில் பெரும் நம்பிக்கை உள்ளது. இதற்குரிய தீா்வு நிச்சயம் கிடைக்கும்’ என்றாா். மொத்தம் 80 மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட உத்தர பிரதேசத்தில், காங்கிரஸுக்கு 17 தொகுதிகளை வழங்குவதாக சமாஜவாதி தெரிவித்துள்ளது.

தொகுதிப் பங்கீடு தொடா்பாக காங்கிரஸ் மற்றும் சமாஜவாதி கட்சி தலைவா்களுக்கு இடையே செவ்வாய்க்கிழமை இரவில் இறுதிக்கட்ட பேச்சுவாா்த்தை நடைபெற்ாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. காங்கிரஸ் தலைவா் ராகுல் காந்தியின் ‘இந்திய ஒற்றுமை நீதி நடைப்பயணம்’ உத்தர பிரதேசத்தில் நடைபெற்று வருகிறது. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்ட பிறகு மட்டுமே நடைப்பயணத்தில் பங்கேற்பதாக சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com