
ஜம்முவில் ரூ.32,000 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று (பிப். 20) தொடங்கி வைத்தார்.
ஐஐடி ஜம்மு, சத்தீஸ்கர் மாநிலத்தின் பிலாய் பகுதியில் ஐஐடி பிலாய், ஐஐடி திருப்பதி உள்ளிட்ட பல கல்வி நிறுவனங்களையும் தொடக்கி வைத்து அர்ப்பணித்தார்.
இதேபோன்று ஜம்மு காஷ்மீரில் சாலை, ரயில் இணைப்புத் திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்து அடிக்கல் நாட்டினார்.
2019ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்ட ஜம்மு எய்ம்ஸ் மருத்துவமனையையும் பிரதமர் தொடங்கி வைத்தார்.
ஜம்மு விமான நிலைய புதிய முனையக் கட்டடம், பெட்ரோலிய பொதுப்பயன்பாட்டுக் கிடங்கிற்கும் அடிக்கல் நாட்டினார். 1,500 பேருக்கு அரசுப் பணிக்கான பணி நியமன ஆணைகளையும் பிரதமர் மோடி வழங்கினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.