மே.வங்கத்தில் நீதிமன்ற உத்தரவை மீறி எதிர்க்கட்சித் தலைவர்கள் தடுத்து நிறுத்தம்!

மேற்கு வங்கம் சந்தேஷ்காளிக்கு செல்ல முயன்ற எதிர்க்கட்சித் தலைவர்களை நீதிமன்ற உத்தரவை மீறி காவல்துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
மே.வங்கத்தில் நீதிமன்ற உத்தரவை மீறி எதிர்க்கட்சித் தலைவர்கள் தடுத்து நிறுத்தம்!

மேற்கு வங்கம் சந்தேஷ்காளிக்கு செல்ல முயன்ற எதிர்க்கட்சித் தலைவர்களை நீதிமன்ற உத்தரவை மீறி காவல்துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

மேற்கு வங்க மாநிலம் வடக்கு 24 பா்கானா மாவட்டம் சந்தேஷ்காளி பகுதியில், திரிணமூல் காங்கிரஸ் பிரமுகா் ஷாஜஹான் ஷேக் மற்றும் அவரின் கூட்டாளிகளான உத்தம் சா்தாா், சிவபிரசாத் ஹஸ்ரா உள்ளிட்டோா் பொதுமக்களின் நிலங்களை அபகரித்து, பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டினா்.

இதையடுத்து சந்தேஷ்காளி பகுதியை பாா்வையிட்ட தேசிய மகளிா் ஆணையம் அப்பகுதியின் பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டுள்ளதை தனது அறிக்கையில் உறுதிசெய்தது. அதேபோல் அப்பகுதியை பாா்வையிட்ட தேசிய பட்டியலினத்தவா்ஆணையம் மாநிலத்தில் குடியரசுத் தலைவா் ஆட்சிக்குப் பரிந்துரை செய்துள்ளது.

இந்த விவகாரத்தில் இதுவரை 18 பேர் கைது செய்யப்பட்டனர், இருப்பினும் முக்கிய குற்றவாளியான ஷாஜஹான் ஷேக் தலைமறைவாக உள்ளார்.

மே.வங்கத்தில் நீதிமன்ற உத்தரவை மீறி எதிர்க்கட்சித் தலைவர்கள் தடுத்து நிறுத்தம்!
அவதூறு வழக்கில் ராகுலுக்கு ஜாமீன்!

இதற்கிடையே, பாதிக்கப்பட்ட பகுதியை பார்வையிட எதிர்க்கட்சியினருக்கு அனுமதி மறுத்து 144 தடை உத்தரவை மாநில அரசு பிறப்பித்தது.

இதனை எதிர்த்து கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், மாநில அரசு பிறப்பித்த 144 தடையை ரத்து செய்து திங்கள்கிழமை உத்தரவிடப்பட்டது.

இந்த நிலையில், இன்று காலை சந்தேஷ்காளிக்கு தனித்தனியாக சென்ற பாஜக தலைவர் சுவேந்து அதிகாரி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் பிரிந்தா காரத் உள்ளிட்டோரை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.

இதனைத் தொடர்ந்து, சாலையில் அமர்ந்து சுவேந்து அதிகாரி உள்ளிட்ட எம்எல்ஏக்கள் போராட்டம் நடத்தினர்.

அப்போது சுவேந்து அதிகாரி பேசியதாவது:

”மாநில அரசு மேல்முறையீடு செய்துள்ளதால், 144 தடை ரத்து செல்லாது என்று காவல்துறையினர் தெரிவித்தார்கள். அரசியலமைப்பு சட்டத்தின் முக்கிய தூணான நீதித்துறைக்கு மம்தா பானர்ஜி சவால் விடுகிறார்.” எனத் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com