மாதிரி படம்
மாதிரி படம்ENS

வனவிலங்கு தாக்குதல் விவகாரம்: காங்கிரஸ் இளைஞர் அணியின் பேரணியில் வன்முறை

காங்கிரஸ் பேரணியில் கலவரம்; அமைச்சர் பதவி விலக கோரிக்கை

வனவிலங்குகள் மக்களைத் தாக்கும் விவகாரத்தில் மாநில அரசு முறையான நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி இளைஞர் அணி சார்பில் வயநாட்டில் மேற்கொள்ளப்பட்ட பேரணியில் வன்முறை வெடித்தது.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அத்துமீற முயன்ற போராட்டக்காரர்களைக் காவலர்கள் லத்தி மற்றும் நீர் பீரங்கிகள் பயன்படுத்தி கட்டுபடுத்த முயன்றனர்.

வனத் துறை அமைச்சர் ஏ கே சசீந்திரன் பதவி விலகக் காங்கிரஸ் கோரி வருகிறது.

இந்த விவகாரத்தில் தீர்வு எட்ட அமைச்சர் குழுவால் ஒருங்கிணைக்கப்பட்ட அனைத்து கட்சி கூட்டத்தை காங்கிரஸின் கூட்டணி புறக்கணித்தது. அதற்கு மறுநாள் இந்த எதிர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது.

அமைதியான முறையில் நடந்த பேரணியில் போராட்டக்காரர்கள் காவல் தடுப்பை மீற முயன்றபோது வன்முறை வெடித்தது.

லத்தி தாக்குதலால் காங்கிரஸார் மற்றும் காவலர்கள் காயமுற்றனர்.

சிலர் சாலையில் அமர்ந்து அரசுக்கு எதிரான முழுக்கங்களை எழுப்பினர்.

கேரள மாநிலம் வயநாடு பகுதியில், வன விலங்குகள் தாக்குதலுக்கு மக்கள் அதிகளவில் ஆளாவதாகவும் அதற்கான நிரந்தர தீர்வு எட்டுவதில் மாநில அரசு தோல்வியடைந்துள்ளதாகவும் காங்கிரஸ் தெரிவித்து வருகிறது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com