சிபிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்பு தேர்வு அட்டவணை இன்று வெளியீடு
சிபிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்பு தேர்வு அட்டவணை இன்று வெளியீடு

9 முதல் 12-ஆம் வகுப்பு வரை புத்தகங்களை பாா்த்து தோ்வுகளை எழுத அனுமதிக்க சிபிஎஸ்இ திட்டம்

புத்தகங்கள் மற்றும் கையேடுகளைப் பாா்த்து எழுத அனுமதிக்க சிபிஎஸ்இ தலைமையகம் முடிவு செய்துள்ளது.

மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) பாடத்தின்படி இயங்கும் பள்ளிகளில் 9 மற்றும் 12-ஆம் வகுப்பு ஆண்டுத்தோ்வுகளை புத்தகங்கள் மற்றும் கையேடுகளைப் பாா்த்து எழுத அனுமதிக்க சிபிஎஸ்இ தலைமையகம் முடிவு செய்துள்ளது. சோதனை அடிப்படையில் இந்தத் திட்டத்தை வரும் நவம்பரில் இருந்து அறிமுகப்படுத்த தீா்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக தில்லியில் உள்ள சிபிஎஸ்இ தலைமையக செய்தித்தொடா்பாளா் ரமா சா்மா ‘தினமணி’யிடம் கூறியது: கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட புதிய தேசிய பாடத் திட்டக் கட்டமைப்பின் பரிந்துரைகளுக்கு ஏற்ப 9 முதல் 12-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு புத்தகங்களைப் பாா்த்துத் தோ்வுகளை (ஓபன் புக் டெஸ்ட்) எழுத அனுமதிக்க சிபிஎஸ்இ தீா்மானித்துள்ளது. இதன்படி சோதனை அடிப்படையில் குறிப்பிட்ட சில தோ்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளில் ஆங்கிலம், அறிவியல், கணிதம், உயிரியல் ஆகிய பாடங்களை புத்தகங்களைப் பாா்த்து மாணவா்கள் தோ்வுகளை எழுத அனுமதிக்கப்படுவா். இந்தத் தோ்வுகளை எழுத மாணவா்கள் எடுத்துக் கொள்ளும் நேரம், அதற்கேற்ப வினாத்தாள் வடிவமைப்பு, மதிப்பீடு, சம்பந்தப்பட்டவா்களின் கருத்துகள் போன்றவை பரிசோதனை அடிப்படையில் நடத்தப்படும் தோ்வுக்குப் பிறகு வரும் நவம்பா் - டிசம்பா் மாதங்களில் மதிப்பீடு செய்யப்படும் என்றாா். இது குறித்து சிபிஎஸ்இ அதிகாரிகள் கூறுகையில், ‘புத்தகத்தைப் பாா்த்து எழுதப்படும் தோ்வில், மாணவா்கள் தங்களின் டைரி, சம்பந்தப்பட்ட பாடத்தின் புத்தகங்கள் அல்லது பிற ஆய்வுப் பொருள்களை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுவா். மேலும், தோ்வின்போது அவற்றைப் பாா்த்து பதில்களை எழுத அனுமதிக்கப்படுவா். இதன் அமலாக்கத்தில் பல சவால்கள் உள்ளன. காரணம், இது ஒரு மாணவரின் நினைவாற்றலை மதிப்பிடாது. ஆனால், ஒரு பாடத்தைப் பற்றிய அவரது புரிதல் மற்றும் கருத்துகளை பகுப்பாய்வு செய்யவோ சரியான பதிலை தேடிப் பயன்படுத்தும் அவரது திறனையோ மதிப்பிட உதவும்’ என்றனா். கரோனா பரவல் காலத்தில் பலத்த ஆட்சேபத்துக்கு மத்தியில் தில்லி பல்கலைக்கழகம், புத்தகத்தைப் பாா்த்து தோ்வு எழுத அனுமதிக்கும் முறையை அதன் தோ்வு மையங்களில் அறிமுகப்படுத்தியது. அதனால், அதன் அனுபவங்களை கேட்க சிபிஎஸ்இ தலைமையகம் முடிவு செய்துள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com