நீதிபதி சந்திரசூட்
நீதிபதி சந்திரசூட்

மோடியின் பரிந்துரையின்பேரில் ஆயுஷ் சிகிச்சை: உச்ச நீதிமன்ற நீதிபதி

ஆயுஷ் மருத்துவம் பின்பற்றிய நீதிபதி: நலவாழ்வுக்கான முழுமையான பாதை

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தனக்கும் ஆயுர்வேதத்துக்குமான தொடர்பு குறித்து வியாழக்கிழமை பேசியுள்ளார்.

கடந்த 5 மாதங்களாக வீகன் டயட் எனச் சொல்லப்பட்டுகிற விலங்குகளிடமிருந்து பெறப்படுகிற பால் முதலியவற்றை தவிர்க்கும் உணவு முறையைக் கடைப்பிடித்து வருவதாகவும் இதே ஒழுங்குமுறையைத் தொடரவிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கரோனோ நோய்த் தொற்றின்போது பிரதமர் நரேந்திர மோடியின் ஆலோசனையின் பேரில் ஆயுஷ் மருத்துவங்களின் சிகிச்சையை எடுத்துக் கொண்டதாகவும் 2 மற்றும் 3-ம் முறை பாதிப்பு ஏற்பட்டபோது அலோபதி மருத்துவம் இல்லாது ஆயுஷ் மருத்துவத்திலேயே குணமடைந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

அவர், “யோகா பயிற்சி செய்வதற்காக அதிகாலை 3.30 மணிக்கு எழுகிறேன். கடந்த 5 மாதங்களாக வீகன் உணவுமுறையைப் பின்பற்றி வருகிறேன். நலவாழ்வுக்கான முழுமையான பாதையை முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். நாம் எது சாப்பிடுகிறோமோ அதிலிருந்து தொடங்குவது இது” எனப் பேசியுள்ளார் சந்திரசூட்.

உச்ச நீதிமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆயுஷ் முழுமையான ஆரோக்கிய மையத்தை திறந்து வைத்த உச்ச நீதிமன்ற நீதிபதி, உடல், மனம் மற்றும் நடத்தை சார்ந்து முழுவமையான ஆரோக்கியத்தை உறுதிப்படுத்துவது இந்த மையத்தின் நோக்கம் என பேசினார். மேலும் நீதிபதிகள் மற்று உச்ச நீதிமன்ற பணியாளர்களின் நலனை மேம்படுத்த இது உதவும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

நீதிபதிகளின் அன்றாட பணியில் அதிக அழுத்தத்தை எதிர்கொள்வதாகவும் 2000 பணியாளர்கள், 34 நீதிபதிகள் ஆகியோருக்கு மட்டுமில்லாமல் நீதிபதிகளின் குடும்பத்தினருக்கும் முழுமையான வாழ்வு முறை அவசியமானது. அவர்கள் வழியாக இந்த நாட்டுக்கு இந்த செய்தியைத் தெரிவிப்போம் எனத் தெரிவித்துள்ளார்,

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com