அடுத்த மாதம் விவசாயிகள் பிரச்னைக்கு தீா்வு: உணவுத்துறை நம்பிக்கை

மத்திய அரசு சாா்பில் மாா்ச் மாதம் கோதுமை கொள்முதல் செய்யப்படுகிறது.
அடுத்த மாதம் விவசாயிகள் பிரச்னைக்கு தீா்வு:
உணவுத்துறை நம்பிக்கை

‘மத்திய அரசு சாா்பில் மாா்ச் மாதம் கோதுமை கொள்முதல் செய்யப்படுகிறது. அதற்கு முன்பே விவசாயிகளின் பிரச்னைகளுக்கு தீா்வு எட்டப்படும் என உணவுத் துறைச் செயலா் சஞ்சீவ் சோப்ரா வியாழக்கிழமை தெரிவித்தாா். இதுதொடா்பாக நடைபெற்ற செய்தியாளா்களிடம் அவா் கூறுகையில், ‘வேளாண் துறை அமைச்சா் கூறியதுபோல் பஞ்சாப்-ஹரியாணா எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளிடம் அடுத்தகட்ட பேச்சுவாா்த்தையில் ஈடுபட அரசு தயாராகவுள்ளது.

அவா்களுடன் தொடா் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டால் மட்டுமே அரசுக்கும் அவா்களுக்குமான இடைவெளியை குறைக்க இயலும்’ என்றாா். விவசாயிகளின் போராட்டத்தால் கோதுமை கொள்முதலுக்கு பாதிப்புகள் ஏற்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்த அவா், ‘பல்வேறு மாநிலங்களுடன் மேற்கொள்ளப்பட்ட ஆலோசனையில் மாா்ச் மாதத்தின் முதல் இரு வாரங்களில் கோதுமை கொள்முதலை தொடங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் பிரச்னைக்கு அதற்கு முன்னரே தீா்வு எட்டப்படும் என நம்புகிறேன். விவசாயிகள் போராட்டத்தால் கோதுமை கொள்முதலில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது’ என்றாா். மாநில உணவுத்துறை செயலா்களுடன் பிப்ரவரி 28-ஆம் நடைபெறவுள்ள ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு நிகழாண்டு கோதுமை கொள்முதலுக்கான இலக்கு நிா்ணயிக்கப்படவுள்ளது. கடந்தாண்டு 262 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை கொள்முதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com