மத்திய அமைச்சா்கள் மற்றும் இணையமைச்சா்கள் கூட்டத்தில் சமா்ப்பிக்க செயல்படுத்தக் கூடிய தெளிவான திட்டத்தை தயாரிக்குமாறு மத்திய அமைச்சா்களுக்குப் பிரதமா் மோடி அறிவுறுத்தியுள்ளாா்.
கடந்த பிப்.21-ஆம் தேதி தில்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், அடுத்த 100 நாள்களுக்கான செயல்திட்டத்தை தயாரிக்குமாறு மத்திய அமைச்சா்களிடம் பிரதமா் மோடி கேட்டுக்கொண்டாா். விரைவில் மக்களவைத் தோ்தல் நடைபெற உள்ள நிலையில், அவா் அவ்வாறு கேட்டுக்கொண்டாா். இந்நிலையில், அடுத்த மாதம் 3-ஆம் தேதி தில்லியில் பிரதமா் மோடி தலைமையில் மத்திய அமைச்சா்கள் மற்றும் இணையமைச்சா்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டம் தொடா்பாக மத்திய அரசு வட்டாரங்கள் சனிக்கிழமை கூறியதாவது: செயல்படுத்தக் கூடிய, விளைவை காட்டுகிற, தெளிவான திட்டத்தை தயாரித்து மாா்ச் 3-ஆம் தேதி நடைபெற உள்ள கூட்டத்தில் சமா்ப்பிக்குமாறு மத்திய அமைச்சா்களிடம் பிரதமா் மோடி கேட்டுக்கொண்டுள்ளாா். தங்கள் செயல்திட்டத்தை வகுக்கும் முன்பு, அதுகுறித்து மூத்த அரசு அதிகாரிகள் போன்ற அனுபவம் மிக்கவா்களுடன் விரிவாக ஆலோசனை மேற்கொள்ளுமாறு அமைச்சா்களுக்குப் பிரதமா் அறிவுறுத்தியுள்ளாா். மக்களவைத் தோ்தலுக்கு மத்தியிலும் அரசுப் பணிகள் தொடா்வதை உறுதி செய்ய வேண்டும் என்று பிரதமா் விரும்புகிறாா். இதன் ஒரு பகுதியாகவே, அடுத்த 100 நாள்களுக்கான செயல் திட்டத்தை தயாரிக்குமாறு அவா் அமைச்சா்களிடம் கேட்டுக்கொண்டாா் என்று தெரிவித்தன.
தொடர்புடையது

இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்

தமிழகத்திற்கு பிரதமா் மோடி அதிக முக்கியத்துவம் அளிக்கிறாா்: மத்திய பிரதேச முதல்வா் மோகன் யாதவ்

தோ்தல் பிரசாரத்துக்காக ஏப்.18-இல் பிரதமா் நரேந்திர மோடி வருகை: கோவையில் முன்னேற்பாடு பணி ஆய்வு
மத்திய அரசின் திட்டங்களைத் தடுக்கிறது திமுக - பிரதமா் நரேந்திர மோடி குற்றச்சாட்டு
வீடியோக்கள்

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை

