பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி.க்கள் சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்: மாயாவதி வலியுறுத்தல்

பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி.க்கள் சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டுமென அந்த கட்சி தலைவர் மாயாவதி வலியுறுத்தியுள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி.க்கள் சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்: மாயாவதி வலியுறுத்தல்

லக்னௌ: பகுஜன் சமாஜ் எம்.பி. ரித்தேஷ் பாண்டே, கட்சியில் இருந்து விலகி தில்லியில் பாஜகவில் ஞாயிற்றுக்கிழமை இணைந்த நிலையில், கட்சியின் நலன் கருதி கட்சி வழிகாட்டுதல்களைப் பின்பற்றுகிறோமா? என பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி.க்கள் சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டுமென அந்த கட்சி தலைவர் மாயாவதி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடா்பாக எக்ஸ் சமூக வலைதளத்தில் அவா் பதிவிட்டுள்ள பதிவில், பகுஜன் சமாஜ் கட்சி மற்ற கட்சிகளைப் போல அல்லாமல், சுயகௌரவத்துக்கும், சுயமரியாதை நோக்கத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட கட்சி. அம்பேத்கா் நமக்கு கற்றுத் தந்த பாடம் அது. நாட்டில் பல்வேறு கட்சிகள் முதலாளித்துவ மனோபாவத்துடன் செயல்பட்டு வருகின்றன. அதிலிருந்து நாம் வேறுபட்டுள்ளோம்.

இதைக் கருத்தில் கொண்டு, கட்சியும் தனது வேட்பாளர்களை தேர்தலில் நிறுத்துகிறது என்று இந்தியில் பதிவிட்டுள்ள மாயாவதி,

பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி.க்கள் சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்: மாயாவதி வலியுறுத்தல்
அருணாசலப் பிரதேசத்தில் காங்கிரஸ், என்பிபி கட்சி எம்எல்ஏக்கள் 4 போ் பாஜகவில் இணைந்தனர்

பகுஜன் சமாஜ் கட்சி வரும் மக்களவைத் தோ்தலில் வேட்பாளா்களைத் தோ்வு செய்ய இருக்கும் தருணத்தில், கட்சி எம்.பி.க்கள் தங்களை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். தங்கள் தொகுதி மக்களுக்கு நாம் உரிய கடமையைச் செய்துள்ளோமா? தங்கள் பகுதியில் முழு நேரத்தையும் ஒதுக்கி பணிபுரிந்தோமா? கட்சியின் நலன்களைப் பாதுகாத்துள்ளோமா? மேலும் கட்சியின் நலன் கருதி அவ்வப்போது வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களை, கட்சி விதிகளை முறையாகப் பின்பற்றுகிறோமா? என்று தங்களைத் தாங்களே சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

மேலும், "இத்தகைய சூழ்நிலையில், இப்போது எம்.பி.யாக இருக்கும் பெரும்பாலானவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்க முடியுமா? என்றால் அதற்கு சாத்தியமில்லை. முக்கியமாக மக்களிடம் நல்ல பெயா் இல்லாதவா்களுக்கு வாய்ப்பு கொடுக்க முடியாது. குறிப்பாக அவர்கள் தங்கள் சொந்த நலன்களுக்காக அங்கும் இங்கும் அலைந்து திரிந்து ஆளும் கட்சியில் இணைவதை அறிந்திருந்தும் ஊடகங்கள் இதை கட்சியின் பலவீனம் என்று விளம்பரப்படுத்துவது அநியாயம். தோ்தல் விஷயத்தில் கட்சியின் நலனே எல்லாவற்றிற்கும் முக்கியமானது’ என்று அவர் கூறியுள்ளாா்.

பகுஜன் சமாஜ் எம்.பி. ரித்தேஷ் பாண்டே மாயாவதிக்கு அனுப்பியுள்ள ராஜிநாமா கடிதத்தில், நீண்ட காலமாக, தன்னை கட்சிக் கூட்டங்களுக்கு அழைக்காததாலும், கட்சித் தலைமை தன்னிடம் பேசாததாலும், உங்களையும் (மாயாவதி) மற்றும் கட்சியின் தலைமையை தொடர்பு கொள்ளவும், சந்திக்கவும் நான் பல முயற்சிகளை மேற்கொண்டேன், ஆனால் அது நடக்கவில்லை. அதனால் கட்சிக்கு தனது சேவை தேவையில்லை என்ற முடிவுக்கு வந்தேன். "எனவே, கட்சியில் இருந்து விலகுவதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை. கட்சியுடனான உறவை முறித்துக்கொள்வது உணர்ச்சிபூர்வமாகவே கடினமான முடிவு தான்" என்றும் மாயாவதி தனது ராஜிநாமாவை ஏற்குமாறு வலியுறுத்தியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com