இந்தியாவின் மிக நீளமான கேபிள் பாலம்: பிரதமர் மோடி திறந்து வைத்தார்!

இந்தியாவின் மிக நீளமான குஜராத்தில் கட்டப்பட்டுள்ள சுதர்சன் சேது கேபிள் பாலத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.
இந்தியாவின் மிக நீளமான கேபிள் பாலம்: பிரதமர் மோடி திறந்து வைத்தார்!

குஜராத்தில் ஓகா நிலப்பரப்பையும், துவாரகா தீவையும் இணைக்கும் 2.32 கிமீ நீளமுள்ள நாட்டின் மிக நீளமான சுதர்சன் சேது கேபிள் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.

முன்னதாக 'சிக்னேச்சர் பாலம்' என்று அழைக்கப்பட்ட இந்தப் பாலம், தற்போது 'சுதர்சன் சேது' அல்லது சுதர்சன் பாலம் எனப் பெயர் மாற்றப்பட்டது.

இந்தியாவின் மிக நீளமான கேபிள் பாலம்: பிரதமர் மோடி திறந்து வைத்தார்!
தூத்துக்குடி மின்சார கார் உற்பத்தி நிறுவனத்துக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல்!

குஜராத் சுதர்சன் சேது பால திறப்பு விழாவில் பிரதமர் மோடி மற்றும் குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் உள்ளிடோர் பங்கேற்றனர்.

"நிலங்களையும் மக்களையும் இணைக்கும் சுதர்சன் சேது பாலத்தை இன்று திறந்து வைப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கான நமது உறுதிப்பாட்டின் சான்றாக இது நிற்கிறது" என்று பிரதமர் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

பேய்ட் துவாரகா என்பது துவாரகா நகரத்திலிருந்து சுமார் 30 கிமீ தொலைவில் உள்ள ஒகா துறைமுகத்திற்கு அருகிலுள்ள ஒரு தீவாகும். இங்கு புகழ்பெற்ற துவாரகாதீசர் கிருஷ்ணர் கோவில் அமைந்துள்ளது. இக்கோயிலில் பிரதமர் மோடி சிறப்பு வழிபாடு மேற்கொண்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com