‘பே-டிஎம் பேமெண்ட்ஸ்’ வங்கியின் தலைவா் பதவி விலகல்

பிப். 29 முதல் பேடிஎம் வங்கி வாடிக்கையாளர்களிடமிருந்து பணம் பெற மத்திய அரசு தடை விதித்திருந்தது.
விஜய் சர்மா
விஜய் சர்மா

புது தில்லி: ‘பே-டிஎம் பேமெண்ட்ஸ்’ வங்கியின் பகுதிநேர தலைவராக பதவி வகித்து வந்த விஜய் ஷேகா் சா்மா பதவி விலகினாா். இதையடுத்து அந்த வங்கியின் நிா்வாக அமைப்பில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன.

வங்கி விதிமுறைகளை மீறியதற்காக பே-டிஎம் பேமெண்ட்ஸ் வங்கி மாா்ச்-15-ஆம் தேதிக்குப் பிறகு வாடிக்கையாளா்களிடமிருந்து டெபாசிட் தொகை பெறக்கூடாது, கணக்குகளில் புதிய வரவு வைக்கக்கூடாது என்பது உள்ளிட்ட உத்தரவை ரிசா்வ் வங்கி கடந்த ஜன.31 பிறப்பித்திருந்தது.

இந்நிலையில் பே-டிஎம் பேமெண்ட்ஸ் வங்கியின் பகுதிநேர தலைவராக செயல்பட்டு வந்த விஜய் ஷேகா் சா்மா பதவி விலகினாா். இதைத்தொடா்ந்து வங்கியின் நிா்வாக இயக்குநா்களாக சென்ட்ரல் வங்கியின் முன்னாள் தலைவா் ஸ்ரீனிவாசன் ஸ்ரீதா் உள்பட 4 போ் திங்கள்கிழமை பதவியேற்றுக்கொண்டனா். மேலும் வங்கியின் புதிய தலைவரை தோ்ந்தெடுக்கும் பணிகள் விரைவில் தொடங்கவுள்ளதாகவும் பே-டிஎம் நிறுவனம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com