தில்லி நெடுஞ்சாலையில் டிராக்டர் சங்கிலிப் போராட்டம்!

யமுனா அதிவிரைவுச் சாலையில் டிராக்டர் சங்கிலிப் போராட்டம் நடத்தவுள்ளதாக விவசாய சங்கத் தலைவர் ராகேஷ் திகைத் தெரிவித்துள்ளார்.
தில்லி நெடுஞ்சாலையில் டிராக்டர் சங்கிலிப் போராட்டம்!
DOTCOM

யமுனா அதிவிரைவுச் சாலையில் டிராக்டர் சங்கிலிப் போராட்டம் நடத்தவுள்ளதாக விவசாய சங்கத் தலைவர் ராகேஷ் திகைத் தெரிவித்துள்ளார்.

வேளாண் விளைபொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூா்வ உத்தரவாதம் அளித்தல், பயிா்க்கடன் தள்ளுபடி என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப் விவசாயிகள் தில்லி நோக்கி பேரணியாக சென்றனர்.

ஹரியாணா காவல்துறையினர் ரப்பர் குண்டுகளை வீசியும், கண்ணீர்ப் புகைக்குண்டுகளை வீசியும் தண்ணீரை பாய்ச்சி அடித்தும் விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தி தடுத்து நிறுத்தினர். இதில், பஞ்சாப்பை சேர்ந்த இளம் விவசாயி தலையில் குண்டு பாய்ந்து கடந்த வாரம் பலியானார்.

இதற்கிடையே, மத்திய அரசுடன் விவசாய சங்கத்தினர் பேச்சுவார்த்தை மேற்கொண்டு வரும் நிலையில், வரும் 29ஆம் தேதி வரை பேரணியை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர்.

இந்த நிலையில், தில்லி செல்லும் யமுனா அதிவிரைவுச் சாலையில் டிராக்டர்களை வரிசையாக நிறுத்தி புதுவிதப் போராட்டத்தை இன்று நடத்தப் போவதாக பாரத கிஷான் யூனியன் தலைவர் ராகேஷ் திகைத் அறிவித்துள்ளார்.

மேலும், யமுனா அதிவிரைவுச் சாலையை நோக்கி பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் டிராக்டருடன் சென்று கொண்டிருப்பதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது..

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com