அடுத்த 2 ஆண்டுகளில் குழந்தைத் திருமணம் ஒழிக்கப்படும்: அஸ்ஸாம் முதல்வர்

நான் உயிருடன் இருக்கும் வரை அஸ்ஸாமில் குழந்தைத் திருமணங்கள் நடக்காது.
அடுத்த 2 ஆண்டுகளில் குழந்தைத் திருமணம் ஒழிக்கப்படும்: அஸ்ஸாம் முதல்வர்
Published on
Updated on
1 min read

மாநிலத்தில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் குழந்தைத் திருமணம் முற்றிலும் ஒழிக்கப்படும் என்று அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா திங்கள்கிழமை தெரிவித்தார்.

202-ம் ஆண்டுக்குள் குழந்தைத் திருமணத்தை ஒழிப்பதற்கான செயல்திட்டத்தை மாநில அரசு தயாரித்துள்ளதாகவும், நான் உயிருடன் இருக்கும் வரை அஸ்ஸாமில் குழந்தை திருமணங்கள் நடக்காது.

அஸ்ஸாம் இஸ்லாமிய திருமணச் சட்டத்தை ரத்து செய்வது குறித்தும் அஸ்ஸாம் சட்டப் பேரவையில் முதல்வர் பேசினார். இஸ்லாமிய திருமணச் சட்டத்தில் ஐந்து முதல் ஆறு வயது வரையிலான குழந்தைகளின் திருமணத்திற்கான ஏற்பாடுகள் இருந்தன. அதனால்தான் சட்டத்தை ரத்து செய்தோம். இஸ்லாமிய குழந்தைகளை வைத்து வியாபாரம் செய்ய யாரையும் அனுமதிக்க மாட்டேன்.

முன்னதாக , 1935ஆம் ஆண்டின் நீண்ட கால அசாம் இஸ்லாமிய திருமணம் மற்றும் விவாகரத்து பதிவுச் சட்டம் மாநில அரசாங்கத்தால் ரத்து செய்யப்பட்டது. முதல்வர் தலைமையில் நடைபெற்ற மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் குழந்தை திருமணத்திற்கு எதிராக அசாம் அரசு பெரிய ஒடுக்குமுறையை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. முதற்கட்ட இயக்கத்தின் போது சுமார் 3,483 பேர் கைது செய்யப்பட்டனர் மற்றும் மொத்தம் 4,515 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

2026ஆம் ஆண்டு வரை குழந்தைத் திருமண அச்சுறுத்தலில் இருந்து அஸ்ஸாம் மாநிலம் விடுவிக்கப்படும் வரை, காவல்துறை ஆண்டுக்கு இரண்டு முறை நடவடிக்கை மேற்கொள்ளும் என்று முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா அறிவித்தார்.

கடந்தாண்டு ஜூலை மாதம், குழந்தைத் திருமணத்திற்கு எதிரான காவல்துறையின் அடக்குமுறையால் 710 குழந்தைத் திருமணங்கள் கண்டுபிடிக்கப்பட்டன, அதில் 1,100 குற்றம் சாட்டப்பட்டவர்கள் பதிவு செய்யப்பட்டனர், அவர்களில் 915 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com