4 வயது குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை!
dotcom

4 வயது குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை!

சிறுமியை காப்பாற்றிய கிராமம்; குற்றவாளி கைது
Published on

உத்தரப் பிரதேசம் மாநிலம் கன்னெளஜ் பகுதியில் 4 வயது குழந்தையைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளியான இளைஞரை காவலர்கள் கைது செய்தனர்.

18 வயதான இவர், திங்கள்கிழமை 4 வயது பெண் குழந்தையை அவரது வீட்டுக்குத் தூக்கி சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு பக்கத்தில் உள்ளோர் வீட்டுக்குள் புகுந்து இளைஞரை பிடித்துள்ளனர்.

கிராமத்தினர் அவரைத் தாக்கி காவலர்களிடம் ஒப்படைத்தனர்.

குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் குழந்தையின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் கூறினர்.

பெண்ணின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் குற்றவாளி கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றுவருவதாக சிப்ரமெள காவலர்கள் தெரிவித்தனர்.

X
Dinamani
www.dinamani.com