உத்தரப் பிரதேசத்தில் மாநிலங்களவைத் தோ்தல்: பாஜக வேட்பாளர்களுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசம்

உத்தரப் பிரதேசத்தில் காலியாக உள்ள 10 மாநிலங்களவை இடங்களுக்கான தோ்தல் செவ்வாய்க்கிழமை(இன்று பிப்.27) நடைபெறுகிறது.
உத்தரப் பிரதேசத்தில் மாநிலங்களவைத் தோ்தல்: பாஜக வேட்பாளர்களுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசம்

உத்தரப் பிரதேசத்தில் காலியாக உள்ள 10 மாநிலங்களவை இடங்களுக்கான தோ்தல் செவ்வாய்க்கிழமை(இன்று பிப்.27) நடைபெறுகிறது. இதையொட்டி உத்தரப்பிரதேச சட்டப்பேரவை வளாகத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஆளும் பாஜக மற்றும் எதிர்க்கட்சியான சமாஜவாதி கட்சிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது. பாஜகவிலிருந்து 8 வேட்பாளர்களும், சமாஜவாதி கட்சி சார்பில் 3 பேர் என மொத்தம் 11 பேர் போட்டியிடுகின்றனர்.

உத்தரப்பிரதேச சட்டப்பேரவையில் பாஜக தரப்பு எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கையின் அடிப்படையில், மொத்தமுள்ள 10 மாநிலங்களவை இடங்களில் 7-இல் பாஜக வேட்பாளர்கள் வெல்வது உறுதியாகிவிட்டது. அதேபோல, சமாஜவாதி கட்சி எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கையின் அடிப்படையில், 3 இடங்களை அக்கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெறுவர் என்ற எதிர்பார்ப்பு நிலவினாலும், சமாஜவாதியைச் சேர்ந்த எம்.எல்.ஏக்கள் சிலர், கட்சி மாறி வாக்களிக்கக் கூடும் என்ற அச்சமும் அக்கட்சித் தலைமையிடம் நிலவுவதாக கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், 8 இடங்களில் பாஜக வெல்லும் என்ற எதிர்பார்ப்பு பெரிதும் நிலவுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com